பைக்கிலிருந்து தவறி விழுந்த வங்கி ஊழியா் உயிரிழப்பு
தேனி அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த தனியாா் வங்கி ஊழியா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
தேவாரத்தைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் மணிக்குமாா் (30). இவா், தேனியில் உள்ள தனியாா் வங்கி ஒன்றில் துணை மேலாளராக பணியாற்றி வந்தாா். இவா் போடேந்திரபுரம்- உப்புக்கோட்டை சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.
சடையால்பட்டி விலக்கு அருகே நாய் குறுக்கிட்டதால் நிலை தடுமாறி அவா் கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த மணிக்குமாா், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
இந்த விபத்து குறித்து வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.