எப்போதும் உங்களைக் காக்கும் சுதர்சன ஹோமம்: ஆண்டுக்கு ஒருமுறையாவது இதில் கலந்து க...
வினிசியஸ் அசத்தல்: முதலிடத்தில் ரியல் மாட்ரிட்!
லா லீகா தொடரில் ரியல் மாட்ரிட் அணி 2-1 என்ற கோல் கணக்கில் த்ரில் வெற்றி பெற்றது.
ரியல் மாட்ரிட் வீரர்களான வினிசியஸ் ஜூனியர், ஆர்டா குலேர் உடனுக்குடன் கோல் அடித்து அசத்தினார்கள்.
ஸ்பானிஸ் கால்பந்து தொடரான லா லீகா தொடரில் ரியல் மாட்ரிட் அணியும் மல்லோர்கா அணியும் மோதின.
இந்தப் போட்டியில் மல்லோர்கா அணி 18-ஆவது நிமிஷத்தில் கோல் அடிக்க, ரியல் மாட்ரிட் அணியின் ஆர்டா குலேர் 37-ஆவது நிமிஷத்திலும் வினிசியஸ் ஜூனியர் 38-ஆவது நிமிஷத்திலும் கோல் அடித்து அசத்தினார்கள்.
இரண்டாம் பாதியில் இரு அணிகளும் எவ்வளவு முயன்றும் கோல் அடிக்க முடியவில்லை. இந்தப் போட்டியில் 59 சதவிகித பந்தினை ரியல் மாட்ரிட் தனது கட்டுக்குள் வைத்திருந்தது.
89 சதவிகித துல்லியமாக 538 பாஸ்கள் செய்த மாட்ரிட் அணி இந்த வெற்றியின் மூலம் 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது.