`விவசாயிகளை பாதிக்கும் திட்டத்திற்கு அரசு அனுமதி வழங்காது'- அமைச்சர் கே.கே.எஸ்.எ...
"பாகுபலி போன்ற வரலாற்றுப் படங்களில் நடிக்க ஆசை; எனக்குப் பிடித்த ஹாலிவுட் படங்கள் இவைதான்"-நாகர்ஜுனா
தெலுங்குத் திரைப்பட உலகில் தனித்துவமான இடத்தைப் பிடித்தவர் அக்கினேனி நாகர்ஜுனா. தமிழில் நாகர்ஜுனா என்றாலே முதலில் ஞாபகம் வருவது 'சோனியா சோனியா', 'சந்திரனைத் தொட்டது' பாடல்கள்தான். இந்த இரண்டு பாடலிலேயே தமிழ் ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்துவிட்டார்.
நடிகராக மட்டுமின்றி, தயாரிப்பாளராகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சியான தெலுங்கு பிக்பாஸின் தொகுப்பாளராகவும் வலம் வந்துகொண்டிருக்கிறார். சமீபத்தில் ரஜினியின் 'கூலி' படத்தில் நடித்து ஸ்டைலிஸான வில்லனாக ரசிகர்களின் மனம் கவர்ந்திருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கும் நாகர்ஜுனா, "இயக்குநர் ராஜமெளலி 'பாகுபலி' படத்தில் எனக்கும் ஒரு கதாபாத்திரம் கொடுத்திருக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். பாகுபலி போன்ற வரலாற்றுப் படங்கள், ராஜாக்கள் கதை, பழங்காலத்துப் படங்களில் நடிக்க எனக்கு ஆசை.
பிரமாண்டமான கதை, ராஜ்ஜியங்கள், மன்னர்கள், இளவரசன், இளவரசிகள் போன்ற கதைகள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதுபோன்ற படங்களைப் பார்க்கவும், அவற்றில் நடிக்கவும் எனக்குப் பிடிக்கும். ஹாலிவுட்டில் 'Troy', '300' படங்கள் எனக்குப் பிடித்த திரைப்படங்கள்" என்று பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...