செய்திகள் :

Ameer: "விஜய் நடத்தியது மாநாடு மாதிரி இல்ல" - தவெக குறித்து இயக்குநர் அமீர் சொல்வது என்ன?

post image

தமிழக அரசியலில் புதிய கட்சியாகக் கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி விஜய்யால் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு கொள்கை விளக்க மாநாடாக 2024 அக்டோபர் 27-ம் தேதி மாபெரும் அளவில் நடத்தப்பட்டது.

இதனைத்தொடர்ந்து மதுரை பாரபத்தியில் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டைக் கடந்த ஆகஸ்ட் 21- ஆம் தேதி நடந்தது.

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்

மேலும் தேர்தலை முன்னிட்டு செப்டம்பர் இரண்டாவது வாரத்திலிருந்து தேர்தல் பரப்புரையை மேற்கொள்ள இருக்கிறார் விஜய்.

இந்நிலையில், காரைக்குடியில் நடந்த மத நல்லிணக்க விழாவில் நேற்று (ஆகஸ்ட் 31) கலந்து கொண்ட இயக்குநர் அமீரிடம் விஜய்யின் அரசியல் பயணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த அவர், "நம் நாட்டில் ஒருவருக்கு வாக்களிக்க எந்த அளவுக்கு உரிமை இருக்கிறதோ அந்த அளவுக்கு கட்சி துவங்கவும் உரிமை இருக்கிறது.

விஜய் கட்சி துவங்கியபோது அதை ஆதரித்தவன் நான். தமிழரான உச்ச நடிகர் புது கட்சி துவங்கியதைப் பார்த்து சந்தோசப்பட்டேன்.

ஆனால் ஒருவரைத் தரக்குறைவாக எப்பொழுதுமே விமர்சிக்கக் கூடாது.

இயக்குநர் அமீர்
இயக்குநர் அமீர்

விஜய் நடத்தியது மாநாடு மாதிரி இல்லை ரசிகர்களின் சந்திப்பு போன்றே இருந்தது.

கட்சி துவங்கியவர்கள் எல்லாம் அரசியலில் நிலைத்து நின்றுவிட முடியாது.

மக்களுக்கான கொள்கைகளை முன் வைப்பவர்கள் மட்டும் தான் நிலைத்து நிற்க முடியும்" என்று கூறியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

``BAD GIRL-தான் எனது தயாரிப்பின் கடைசி படம்; தயாரிப்பு நிறுவனத்தை இழுத்து மூடுகிறோம்'' - வெற்றிமாறன்

இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் கம்பெனி தயாரிப்பில், அறிமுக இயக்குநர் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'BAD GIRL'.அஞ்சலி சிவராமன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இப்படத... மேலும் பார்க்க

Madharaasi: "எனக்கு சரியான சம்பளம் இல்லாதபோதும் என் மனைவி என்னை ஏற்றுக் கொண்டார்" - சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'மதராஸி' திரைப்படம் வருகிற செப்டம்பர் 5-ம் தேதி வெளியாகிறது. படத்தின் ப்ரோமோஷனுக்காக முக்கிய நகரங்களுக்கு சிவகார்த்திகேயன் சுற்றி வருகிறார். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியிர... மேலும் பார்க்க

Ajith Kumar: "என்னை பிரபலப்படுத்தாதீங்க; அதற்குப் பதில்" - ரசிகர்களுக்கு அஜித்தின் அறிவுரை என்ன?

நடிகர் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் குமார். நடிப்பைத் தாண்டி கார் மற்றும் பைக் ரேஸில் அதிக ஆர்வம் கொண்டவர்.சமீப காலமாக அவர் பல்வேறு சர்வதேச கார் ரேஸ் போட்டிகளில் கலந்துகொண்டு வருகிறார்.... மேலும் பார்க்க

Shruthi Haasan: கூலி படப்பிடிப்பு படங்களைப் பகிர்ந்த ஷ்ருதி |Photo Album

Shruthi Hassan in Coolie SetsShruthi Hassan in Coolie SetsShruthi Hassan in Coolie SetsShruthi Hassan in Coolie SetsShruthi Hassan in Coolie SetsShruthi Hassan in Coolie SetsShruthi Hassan in Coolie S... மேலும் பார்க்க

Bhavna: பாவனா - யோகி பாபு சர்ச்சை; ``எதையும் நம்பிவிடாதீர்கள்..!" - தொகுப்பாளர் பாவனா விளக்கம்!

சமீபத்தில் நடிகர் ரவிமோகன் சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதன் துவக்க விழாவை சென்னையில் நடத்தினார்.அதில் நிகழ்ச்சித் தொகுப்பாள பாவனா, மனதில் இருப்பதை வெளிப்படையாகப் பேசி விளையாடலாம்னு ஆரம்பிச்ச... மேலும் பார்க்க

"பாகுபலி போன்ற வரலாற்றுப் படங்களில் நடிக்க ஆசை; எனக்குப் பிடித்த ஹாலிவுட் படங்கள் இவைதான்"-நாகர்ஜுனா

தெலுங்குத் திரைப்பட உலகில் தனித்துவமான இடத்தைப் பிடித்தவர் அக்கினேனி நாகர்ஜுனா. தமிழில் நாகர்ஜுனா என்றாலே முதலில் ஞாபகம் வருவது 'சோனியா சோனியா', 'சந்திரனைத் தொட்டது' பாடல்கள்தான். இந்த இரண்டு பாடலிலேய... மேலும் பார்க்க