எப்போதும் உங்களைக் காக்கும் சுதர்சன ஹோமம்: ஆண்டுக்கு ஒருமுறையாவது இதில் கலந்து க...
அமெரிக்காவில் நடுவானில் மோதிக் கொண்ட சிறிய ரக விமானங்கள்! ஒருவர் பலி
அமெரிக்காவின் கொலரடோ விமான நிலையத்துக்கு அருகே இரண்டு சிறிய ரக விமானங்கள் ஒன்றுடன் ஒன்று நடுவானில் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானார். மூன்று பேர் காயமடைந்தனர்.
இந்த விபத்தில், ஒரு விமானம் தீப்பற்றி எரிந்தது, மற்றொரு விமானம் அடையாளம் தெரியாத அளவுக்கு உருகுலைந்து போனது.
இது குறித்து அமெரிக்க போக்குவரத்துத் துறை தெரிவித்திருப்பதாவது, செஸ்னு 172 மற்றும் இஏ300 ரக விமானங்கள், கொலரடோ விமான நிலையத்தை நெருங்கி வந்த போது, எதிர்பாராத விதமாக நடுவானில் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இதில் ஒரு விமானத்தில் தீப்பிடித்து எரிந்ததாகவும், மற்றொரு விமானம் கடுமையாக சேதமடைந்ததாகவும் கூறப்படுகிறது. விமான விபத்து நேரிட்ட இடத்தில் இருந்த மக்கள் விரைந்து வந்து மீட்கப் பணியை மேற்கொண்டுள்ளனர். காயமடைந்தவர்கள் விரைவாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவும் உதவியிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டுள்ளதாக மோர்கான் கவுண்டி ஷெரிஃப் அலுவலகம் தெரிவித்துள்ளது.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விபத்தில் சிக்கிய விமானங்களில் இருந்தவர்களின் அடையாளங்கள் வெளியிடப்படவில்லை.