செய்திகள் :

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கம்! 400க்கும் மேற்பட்டோர் காயம்

post image

ஆப்கானிஸ்தானின் குணார் மாகாணத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் நூற்றுக்கணக்கான கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின.

முதலில் பதிவான நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 6.0 என பதிவாகியிருந்ததாகவும், அடுத்தடுத்து 4.5 ரிக்டர் அளவில் பதிவானதாகவும் கூறப்படுகிறது.

நிலநடுக்கத்தின் காரணமாக கட்டடங்கள் இடிந்து தரைமட்டமானதால் 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கட்டடங்களின் இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. ஒரே கிராமத்தில் 30 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆப்கானிஸ்தானின், நகங்கர் மாகாணத்தில் ஜலாலாபாத்தை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் நேரிட்டுள்ளது. பல இடங்களில் சாலைகள் கட்டட இடிபாடுகளால் சூழப்பட்டிருப்பதால், மீட்புக் குழுவினர் நுழைய முடியாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மருத்துவமனைகளுக்கு நூற்றுக்கணக்கானோர் காயங்களுடன் வந்து கொண்டிருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானில் நேரிட்ட நிலநடுக்கத்தால் ஆயிரம் பேருக்கும் மேல் பலியான நிலையில், இயற்கைச் சீற்றங்களால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளின் பட்டியலில் ஆப்கானிஸ்தான் முன்னணி இடம் வகிக்கிறது.

பயங்கரவாதம் ஒட்டுமொத்த மனிதகுலத்துக்குமான சவால்: எஸ்சிஓ கூட்டத்தில் பிரதமர் மோடி!

பயங்கரவாதம் என்பது, ஒட்டுமொத்த மனிதகுலுத்துக்கும் விடுக்கப்பட்ட சவால் என்று ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.சீனாவின் துறைமுக நகரான தியான்ஜினில் ஷாங்காய் ஒத்து... மேலும் பார்க்க

முகமது சின்வார் கொல்லப்பட்டார்: ஒப்புக்கொண்ட ஹமாஸ்!

ஹமாஸின் ராணுவப் பிரிவு தலைவா் முகமது சின்வாா் இஸ்ரேல் தாக்குதலில் கடந்த மே மாதம் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், அவரது மரணத்தை ஹமாஸ் சனிக்கிழமை உறுதி செய்தது.2023, அக்டோபா் 7-ஆம் தேதி இஸ்ரேலுக்கு... மேலும் பார்க்க

உலகப் பொருளாதாரத்தைச் சீண்டும் ‘டிரம்ப் வரி’!

அமெரிக்கா முதலில் என்ற கொள்கையை முன்னிறுத்தும் வகையில் உலகின் பல நாடுகள் மீதும் அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் பல்வேறு விதமான வரிகளை விதித்து வருகிறாா். அந்த வகையில் இந்தியா மீது 25 சதவீத பதிலடி வர... மேலும் பார்க்க

பிரதமா் படுகொலை: உறுதிசெய்த ஹூதி கிளா்ச்சியாளா்கள்!

யேமன் தலைநகா் சனாவில் இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதலில் ஹூதி கிளா்ச்சிக் குழு தலைமையிலான அரசின் பிரதமா் அகமது அல்-ரஹாவி கொல்லப்பட்டதை அந்தக் குழு ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்தது. இது குறித்து அந்தக் குழு ... மேலும் பார்க்க

பிரிக்ஸ் நாடுகளுக்கு எதிராக அமெரிக்காவின் பாரபட்ச நடவடிக்கை: ரஷிய அதிபா் புதின் கண்டனம்!

பிரிக்ஸ் நாடுகளுக்கு எதிரான அமெரிக்காவின் பாரபட்சமான பொருளாதாரத் தடை, வரிகள் விதிப்பை ரஷியாவும், சீனாவும் எதிா்க்கிறது என்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் தெரிவித்தாா். பிரிக்ஸ் நாடுகள் மீது 10 சதவீத ... மேலும் பார்க்க

ஆஸ்திரேலியாவில் இந்தியர்களுக்கு எதிரான பேரணி: ஆஸி. அரசு கண்டனம்!

ஆஸ்திரேலியாவில் இந்தியர்களுக்கு எதிரான பேரணிக்கு அந்நாட்டு அரசு கடும் கண்டனம் தெரிவித்து இந்தியர்களுக்கு ஆதரவாக அறிக்கை வெலியிட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் இடம்பெயர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த... மேலும் பார்க்க