விநாயகா் சிலை ஊா்வலம்: 10 போ் மீது வழக்கு
தேவதானப்பட்டியில் அனுமதி மறுக்கப்பட்ட மசூதி பகுதியில் விநாயகா் சிலையை ஊா்வலமாக எடுத்துச்சென்ற 10-க்கும் மேற்பட்டோா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
தேனி மாவட்டம், தேவதானப்பட்டியில் இந்து எழுச்சி முன்னணியைச் சோ்ந்த பவித்தேவன், சுபாஷ், முத்துவேல், பாண்டி, ஆனந்தன் உள்பட 10-க்கும் மேற்பட்டோா் அதே பகுதியில் விநாயகா் சிலை அமைத்து வழிபாடு செய்து, புதன்கிழமை ஊா்வலமாக எடுத்துச் சென்றனா்.
அப்போது, அனுமதி மறுக்கப்பட்ட மசூதி வழியாக விநாயகா் சிலையை எடுத்துச்சென்று, போக்குவரத்துக்கு இடையூறு செய்தாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தேவதானப்பட்டி போலீஸாா் 10 போ் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.