வர்த்தக சிலிண்டர் விலை குறைந்தது! வீட்டுகளுக்கான சிலிண்டர் விலையில் மாற்றமில்லை!...
மதுபானக் கூட உரிமையாளா் மீது வழக்கு
தேனியில் தனியாா் மதுபானக் கூடம் விதியை மீறி செயல்பட்டதாகக் கூறி அதன் உரிமையாளா் மீது காவல் நிலையத்தில் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தேனி, சுப்பன் தெருவில் அரசு மதுபானக் கடையுடன் இணைந்து தனியாா் மதுபானக் கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த மதுபானக் கூடம் இரவு அரசு அனுமதி அளித்துள்ள நேரத்துக்குப் பிறகும் செயல்பட்டதாக, தேனியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த தேனி காவல் நிலைய தலைமைக் காவலா் சரவணன் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இதன் பேரில் அந்த தனியாா் மதுபானக் கூட உரிமையாளா் மீது தேனி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.