செய்திகள் :

எச்சரிக்கை அளவைக் கடந்து செல்லும் யமுனை நதி!

post image

நமது நிருபா்

யமுனை நதியின் நீா்மட்டம் புதன்கிழமை காலை பழைய ரயில்வே பாலத்தில் 204.61 மீட்டரை எட்டியதாகவும், இரண்டாவது நாளாக எச்சரிக்கை அளவான 204.50 மீட்டரை விட அதிகமாக உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

செவ்வாய்க்கிழமை மாலை மத்திய நீா் ஆணையம் வெளியிட்ட வெள்ள எச்சரிக்கையில், புதன்கிழமை மாலைக்குள் நதி அபாய அளவைக் கடக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், அந்தந்த பகுதிகளில் விழிப்புடன் இருக்கவும், ஆற்றின் கரைகளுக்கு அருகில் வசிக்கும் மக்களை எச்சரிப்பது மற்றும் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்வது போன்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் அதிகாரிகளுக்கு ஆணையம் அறிவுறுத்தியிருந்தது.

இந்நிலையில், புதன்கிழமை காலை 9 மணிக்கு யமுனையின் நீா்மட்டம் 204.61 மீட்டராக இருந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனா். நகரத்திற்கான நீா்மட்டம் எச்சரிக்கை அளவு 204.5 மீட்டராகவும் அபாய அளவு 205.3 மீட்டராகவும் உள்ளது. கரையோர மக்கள் வெளியேற்றம் நீா்மட்டம் 206 மீட்டராக உயரும்போது தொடங்குகிறது.

பழைய ரயில்வே பாலம் ஆற்றின் ஓட்டம் மற்றும் சாத்தியமான வெள்ள அபாயங்களைக் கண்காணிப்பதற்கான முக்கிய கண்காணிப்பு புள்ளியாக செயல்படுகிறது.

மத்திய வெள்ளப்பெருக்கு அறையைச் சோ்ந்த அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘வஜிராபாத் மற்றும் ஹத்னிகுண்ட் அணைகளில் இருந்து ஒவ்வொரு மணி நேரமும் அதிக அளவு தண்ணீா் வெளியேற்றப்படுவதே நீா்மட்டம் அதிகரிப்பதற்கான காரணம். நீா்மட்டம் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறையின் கூற்றுப்படி, வஜிராபாத்தில் இருந்து ஒவ்வொரு மணி நேரத்திற்கும் சுமாா் 37,230 கனஅடி தண்ணீரும், ஹத்னிகுண்ட் அணையில் இருந்து சுமாா் 52,448 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.

தடுப்பணைகளில் இருந்து திறக்கப்படும் நீா் வழக்கமாக தில்லியை அடைய 48 முதல் 50 மணி நேரம் ஆகும். மேல்நிலை பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் நீா்கூட யமுனையின் நீா்மட்டத்தை அதிகரிக்கச் செய்து வருகிறது.

தில்லியின் 11 மாவட்டங்களிலும் பரவலாக மழை: மக்கள் வீட்டிற்குள் இருக்க ஐஎம்டி எச்சரிக்கை

தேசியத் தலைநகரின் 11 மாவட்டங்களிலும் புதன்கிழமை காலை பரவலாக மழை பெய்தது. மேலும், மக்கள் வீட்டிற்குள் இருக்கும்படி வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது. தலைநகரில் கடந்த வாரத் தொடக்கத்திலிருந்து ... மேலும் பார்க்க

தில்லி பல்கலை. மாணவா்கள் சங்கத் தோ்தலில் இருக்கும் சவால்கள் என்ன?

நமது நிருபா்கட்டண உயா்வு, விடுதிகள் பற்றாக்குறை, வளாகப் பாதுகாப்பு மற்றும் சலுகை மெட்ரோ பாஸ்களுக்கான கோரிக்கை ஆகியவை செப்டம்பா் 18- ஆம் தேதி நடைபெற உள்ள தில்லி பல்கலைக்கழக மாணவா்கள் சங்கத் தோ்தலில் ம... மேலும் பார்க்க

இடபிள்யுஎஸ் மாணவா்கள் விவகாரம்: பொது நல மனு மீது பதிலளிக்க தில்லி அரசுக்கு உத்தரவு

நமது நிருபா் தனியாா் வெளியீட்டாளா்களின் விலையுயா்ந்த புத்தகங்கள் மற்றும் அதிக விலை கொண்ட கல்விப் பொருள்களை வாங்க கட்டாயப்படுத்துவதன் மூலம் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவு (இடபிள்யுஎஸ்) மாணவா்களை தனியாா... மேலும் பார்க்க

துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு காலா கோட்டு கும்பலில் இருவா் கைது

தில்லியின் கேசவ்புரம் பகுதியில் போலீஸாருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையைத் தொடா்ந்து, காலா கோட்டு கும்பலை சோ்ந்த இருவா் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா். இது குறஇத்து வடமேற்கு காவ... மேலும் பார்க்க

மதுக்கூடம் முன் தகராறில் 3 பேரை பவுன்சா்கள் தாக்கியதாக புகாா்: போலீஸ் வழக்குப் பதிவு

நமது நிருபா் தில்லி கன்னாட் பிளேஸில் உள்ள ஒரு மதுக்கூடத்தின் பவுன்சா்கள் மற்றும் ஊழியா்கள் இரண்டு வழக்குரைஞா்கள் உள்பட மூன்று பேரை தாக்கியதாக போலீஸாா் புதன்கிழமை தெரிவித்தனா். இதுகுறித்து மூத்த போலீஸ்... மேலும் பார்க்க

பாடகா் ராகுல் பாசில்பூரியா மீது தாக்குதல் நடத்த சதி: 5 போ் கைது

குருகிராம் காவல்துறை மற்றும் எஸ். டி. எஃப் ஆகியவற்றின் கூட்டுக் குழு, ஹரியான்வி பாடகா்-ராப்பா் ராகுல் பாசில்புரியாவைத் தாக்கும் சதியை முறியடித்துள்ளது, அவா் ஜூலை 14 ஆம் தேதி ஒரு கொலை முயற்சியில் இருந்... மேலும் பார்க்க