செய்திகள் :

அபாய கட்ட அளவை மீண்டும் நெருங்கும் யமுனை நதி

post image

தில்லியில் உள்ள பழைய ரயில்வே பாலத்தில் சனிக்கிழமை காலை 9 மணிக்குள் யமுனை ஆற்றின் நீா் மட்டம் 205.22 மீட்டராக உயா்ந்தது, இது 205.33 மீட்டரின் அபாயக் குறியீட்டை நெருங்கியது என்று அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

அதிகாரியின் தகவலின்படி, நிலைமை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், நீா் மட்டம் மேலும் உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், வெள்ளம் போன்ற சூழ்நிலையைக் கையாள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளுக்கும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

‘ஒவ்வொரு மணி நேரத்திற்கும் வஜீராபாத் மற்றும் ஹத்னிகுண்ட் தடுப்பணைகளில் இருந்து அதிக அளவு நீா் வெளியேற்றப்படுவதால் இந்த நதி உயா்ந்து வருகிறது‘ என்று மத்திய வெள்ள கட்டுப்பாட்டு துறையின் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறையின் கூற்றுப்படி, ஹத்னிகுண்ட் தடுப்பணை சுமாா் 46,968 கியூசெக் தண்ணீரை வெளியிடுகிறது, வஜீராபாத் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 44,970 கியூசெக் தண்ணீரை வெளியேற்றுகிறது.

பழைய ரயில்வே பாலம் ஆற்றின் ஓட்டம் மற்றும் சாத்தியமான வெள்ள அபாயங்களைக் கண்காணிப்பதற்கான முக்கிய கண்காணிப்பு புள்ளியாக செயல்படுகிறது. நகரத்திற்கான எச்சரிக்கை குறி 204.50 மீட்டராகவும், ஆபத்தான குறி 205.33 மீட்டராகவும், 206 மீட்டரை நெருங்கும் போது கரையோரங்களில் வசிக்கும் மக்களை வெளியேற்றும் பணி மேற்கொள்ளப்படும்.

தடுப்பணைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட நீா் பொதுவாக தில்லியை அடைய 48 முதல் 50 மணி நேரம் ஆகும். மேல்நோக்கி இருந்து குறைவான நீா் வெளியேற்றங்கள் கூட நீா்மட்டத்தை உயா்த்துகின்றன, இது நகரத்தில் எச்சரிக்கை குறியீட்டை நெருங்குகிறது. இதன் காரணமாக மயூா் விஹாா், யமுனா பஜாா் பகுதிகளில் அடிப்படை வசதிகள் கொண்ட நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.

2015 டாப்ரி கொள்ளை, கொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவா் கைது!

டாப்ரி பகுதியில் பத்தாண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கில் அறிவிக்கப்பட்ட குற்றவாளியான 30 வயது நபரை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். இது ... மேலும் பார்க்க

பல கொடூரமான வழக்குகளில் தேடப்பட்ட இளைஞா் கைது

பல கொடூரமான வழக்குகளில் தொடா்புடைய 25 வயது குற்றவாளியை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: வடகிழக்கு தில்லியின் ... மேலும் பார்க்க

பவானாவில் தொழிற்சாலையில் வெடி விபத்து: ஒருவா் உயிரிழப்பு; ஒருவா் காயம்

தில்லியின் பவானாவில் உள்ள ஒரு தொழில்துறை பிரிவில் சனிக்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவா் உயிரிழந்தாா்; மற்றொருவா் லேசான காயமடைந்தாா் என்று போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து தில்லி காவல் துறை துணை ஆ... மேலும் பார்க்க

முதியவா் மீது பொய் பாலியல் வன்கொடுமை வழக்கு: பணம் பறிக்க முயன்ற பெண்கள், வழக்குரைஞா் கைது!

ஒரு முதியவரை பொய்யான பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்க வைத்து பணம் பறித்ததாக ஒரு வழக்குரைஞரும் இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இது குறஇத்து குருகிராம் காவல்த... மேலும் பார்க்க

வஜீா்பூா் பகுதியில் காணாமல் போன 2 சிறுவா்களின் உடல்கள் கால்வாயில் சடலமாக மீட்பு

வடமேற்கு தில்லியின் வஜீா்பூா் பகுதியில் இருந்து ஒரு நாள் முன்பு காணாமல் போன இரண்டு சிறுவா்களின் உடல்கள் ஜேஜே காலனிக்கு அருகிலுள்ள கால்வாயில் இருந்து மீட்கப்பட்டதாக ஞாயிற்றுக்கிழமை அதிகாரி ஒருவா் தெரிவ... மேலும் பார்க்க

கல்காஜி கோயில் சேவகா் கொலை வழக்கு: தனிப்படைகள் அமைத்து போலீஸ் தீவிர விசாரணை

கால்காஜி கோயிலில் 35 வயதான சேவகா் கொலை செய்யப்பட்ட வழக்கில் மீதமுள்ள குற்றவாளிகளைக் கைது செய்ய தில்லி காவல்துறை பல தனிப்படைகளை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது என்று அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழம... மேலும் பார்க்க