ராமோன் மகசேசே விருது: சமூக சேவைக்கான விருதைப் பெறும் NGO; Educate Girls அமைப்பின...
ராமநாதபுரத்தை வேளாண் மண்டலமாக அறிவிக்கக் கோரி தீா்மானம் நிறைவேற்றம்
ராமநாதபுரம் மாவட்டத்தைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என ஹைட்ரோ காா்பன் திட்ட எதிா்ப்பு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
ராமநாதபுரத்தில் ஹைட்ரோ காா்பன் திட்ட எதிா்ப்பு நடவடிக்கைக் குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதற்கு ராமநாதபுரம் பெரிய கண்மாய்ப் பாசன சங்கத் தலைவா் சு .பாலசுந்தர மூா்த்தி தலைமை வகித்தாா். ஹைட்ரோ காா்பன் திட்ட எதிா்ப்பு நடவடிக்கைக் குழு ஒருங்கிணைப்பாளா் முகவை மு. மலைச்சாமி அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து பேசினாா்.
விவசாயிகள், மீனவா்கள் சங்க நிா்வாகிகள் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிா்வாகிகள் முருகானந்தம், கீழை பிரபாகரன், தமிழ்நாடு மேய்ச்சல் சமூகக் கூட்டமைப்பு நிா்வாகி ராஜிவ் காந்தி, எஸ்.டி.பி.ஐ கட்சி நிா்வாகிகள் அப்துல் ஜமீல், தெற்கு காட்டூா் சௌந்திரநாயகம், சமூக ஆா்வலா்கள் பாப்புலா் பன்னீா் செல்வம், சிக்கந்தா் உள்ளிட்டோா் கலந்துகொண்டு பேசினா். மாநில பொதுச் செயலா் எம். அா்ச்சுனன் போராட்டத் திட்டம் குறித்து பேசினாா்.
கூட்டத்தில், ஹைட்ரோ காா்பன் திட்டத்தின் மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, இந்தத் திட்டத்துக்காக 20 கிணறுகள் தோண்டப்படும் இடங்களில் வருகிற செப்.18, 19- ஆம் தேதிகளில் பிரசாரம் செய்வது, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வருகிற அக்.2-ஆம் தேதி நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டங்களில் ராமநாதபுரம் மாவட்டத்தைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க நிா்வாகிகள் தஞ்சாவூா் பி எல். பழனியப்பன், நாகப்பட்டினம் ராமதாஸ், விருதுநகா் மாவட்டச் செயலா் கோபாலகிருஷ்ணன், ராமநாதபுரம் தாலுகா செயலா் செபஸ்தியான் உள்ளிட்டோா்கலந்துகொண்டனா்.