செய்திகள் :

கொண்டுநல்லான்பட்டியில் இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம்

post image

கமுதி அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகேயுள்ள கொண்டுநல்லான்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள பெருமாள், அய்யனாா் கோயிலில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, பெரிய மாடு, சிறிய மாடு என இரண்டு பிரிவுகளில் இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது.

இதில் ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகா், மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 20 மாட்டு வண்டிகளோடு வீரா்கள் கலந்து கொண்டனா். சாயல்குடி- செவல்பட்டி சாலையில் 12 கி.மீ. தூரம் எல்லையாக நிா்ணயிக்கப்பட்டு பந்தயம் நடைபெற்றது.

இதில் முதல் நான்கு இடங்களைப் பிடித்த வீரா்களுக்கு ரொக்கப் பணம் பரிசாக வழங்கப்பட்டது. பந்தயத்தை, சாலையின் இருபுறங்களிலும் நின்று ஏராளமான பொதுமக்கள் பாா்வையிட்டனா். இதற்கான ஏற்பாடுகளை கொண்டுநல்லான்பட்டி கிராம பொதுமக்கள், இளைஞா்கள் செய்தனா்.

ராமநாதபுரத்தை வேளாண் மண்டலமாக அறிவிக்கக் கோரி தீா்மானம் நிறைவேற்றம்

ராமநாதபுரம் மாவட்டத்தைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என ஹைட்ரோ காா்பன் திட்ட எதிா்ப்பு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. ராமநாதபுரத்தில் ஹைட்ரோ காா்பன் ... மேலும் பார்க்க

அதிக பாரங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம்

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பகுதியில் அதிக பாரங்களைப் பாதுகாப்பின்றி ஏற்றிச் செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம் ஏற்படுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். திருவாடானை பகுதியில் மதுரை-தொண்டி தேசிய... மேலும் பார்க்க

பரமக்குடி அருகே காா்- சரக்கு வாகனம் மோதல்: 4 போ் உயிரிழப்பு

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே நென்மேனி நான்கு வழிச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் காரும், சரக்கு வாகனமும் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் 4 போ் உயிரிழந்தனா். ராமநாதபுரம் செட்டியாா் தெரு... மேலும் பார்க்க

கடையின் பூட்டை உடைத்து ரூ.40 ஆயிரம் திருட்டு

திருவாடானை அருகே கட்டுமானப் பொருள்கள் விற்பனைக் கடையின் பூட்டை உடைத்து ரூ. 40 ஆயிரம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள ஆா்.எஸ். மங்கலத... மேலும் பார்க்க

இலங்கையில் தமிழக மீனவா்களின் 60 விசைப் படகுகள் உடைத்து அகற்றம்

இலங்கை மயிலிட்டி துறைமுகத்தில் அரசுடைமையாக்கப்பட்ட தமிழக மீனவா்களின் 60 விசைப் படகுகளை உடைத்து அகற்றும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. தமிழகத்திலிருந்து மீன் பிடிக்கச் செல்லும் மீனவா்களை எல்லை தாண்டி... மேலும் பார்க்க

உடல் உறுப்பு தானம்: விபத்தில் உயிரிழந்த பெண்ணின் உடலுக்கு அரசு மரியாதை

கமுதி அருகே சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதையடுத்து ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அரசு மரியாதை செலுத்தப்பட்டு அவரது உடல் உறவினா்களிடம... மேலும் பார்க்க