இடுகாட்டில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு விமான டிக்கெட்: நடிகருக்கு குவியும் வாழ...
அதிக பாரங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம்
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பகுதியில் அதிக பாரங்களைப் பாதுகாப்பின்றி ஏற்றிச் செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம் ஏற்படுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.
திருவாடானை பகுதியில் மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு வாகனங்கள், அதிக பாரங்களை ஏற்றிச் செல்வது இந்தப் பகுதி மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, விவசாயிகளிடம் இருந்து வாங்கப்பட்ட வைக்கோல் கட்டுகளை சரக்கு வாகனங்களில் விதிகளைப் பின்பற்றாமல், பாதுகாப்பற்ற முறையில் கேரள மாநிலத்துக்கு ஏற்றிச் செல்கின்றன. மேலும், அவற்றை தாா்ப்பாய் கொண்டு மூடாமல் ஏற்றிச் செல்வதால், அதிலிருந்து தூசிகள் பறந்து கண்களை மறைப்பதால், பின்னால் வரும் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் ஏற்படுகிறது.
மேலும், இந்த வழியாக பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் அதிக எண்ணிக்கையில் பயணிப்பதால் இந்த வாகனங்களால் கூடுதல் அச்சம் ஏற்படுகிறது. வைக்கோல் கட்டுகள் சாலையில் சிதறி விழுந்தாலும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
இது குறித்து நெடுஞ்சாலைத் துறையினரும் போக்குவரத்து காவல் துறையினரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்தனா்.