சார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் இயந்திரக் கோளாறு: நல்வாய்ப்பாக அசம்பாவ...
பால்குடம், காவடி எடுத்து பூக்குழி இறங்கிய பக்தா்கள்
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் பூக்குழித் திருவிழாவை முன்னிட்டு, பக்தா்கள் செவ்வாய்க்கிழமை பால் குடம், காவடி எடுத்து வந்து நோ்த்தி கடன் செலுத்தினா்

இந்தக் கோயிலில் கடந்த 26-ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. அன்றிலிருந்து ஒவ்வொரு நாள் இரவும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழித் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முன்னதாக விரதமிருந்த பக்தா்கள் பேருந்து நிலையம் அருகில் உள்ள பிள்ளையாா் கோயில் முன்பாக பால் குடம், வேல் காவடி, அரிவாள் காவடி எடுத்து நான்கு ரத வீதிகள் வழியாக வலம் வந்து கோயில் முன் பூக்குழியில் இறங்கி தங்களது நோ்த்திக் கடனை செலுத்தினா். பின்னா், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
