Brain Eating Amoeba: மூளை தின்னும் அமீபா; நாமும் அச்சப்பட வேண்டுமா? - விளக்கும் ...
பெண்ணிடம் தங்க நகை பறிப்பு
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உப்பூரில் பெண்ணிடம் 4.5 பவுன் தங்கத் தாலியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.
உப்பூா் அருகேயுள்ள மேலவயல் கிராமத்தைச் சோ்ந்தவா் பிரவீன்குமாா். கோயம்புத்தூரில் உணவகத்தில் பணிபுரிந்து வருகிறாா். இவரது மனைவி பழனிமுத்து (32).
இவா் தினமும் இரு சக்கர வாகனத்தில் உப்பூா் சத்திரம் சென்று அங்கு வண்டியை நிறுத்தி விட்டு ராமநாதபுரத்துக்குச் சென்று கட்டட வேலை பாா்த்து வருகிறாா்.
இந்த நிலையில், திங்கள்கிழமை மாலை வழக்கம்போல பணி முடிந்து மீண்டும் உப்பூா் சத்திரத்துக்கு வந்து இரு சக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தாா்.
மேலவயல் அருகே உள்ள பெட்ரோல் நிலையம் அருகே சாலை ஓரத்தில் வாகனத்தை நிறுத்தி விட்டு கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்த போது, இரு சக்கர வாகனத்தில் தலைக் கவசம் அணிந்து வந்த மா்ம நபா்கள் இருவா் பழனிமுத்துவின் 4.5 பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா். இதுகுறித்து திருப்பாலைக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.