செய்திகள் :

சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு; குற்றாலம் சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்!

post image

ராமநாதபுரம் செட்டியார் தெருவில் வசித்து வந்தவர் கோவிந்தராஜன். அரிசி வியாபாரம் செய்து வரும் இவர் தனது மனைவி யமுனா மற்றும் மகன், மகள் ஆகியோருடன் குற்றாலத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர். இதற்காக நேற்று நள்ளிரவு ராமநாதபுரத்தில் இருந்து வாடகை காரில் பயணம் செய்துள்ளனர். காரினை மணக்குடியை சேர்ந்த காளீஸ்வரன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். நள்ளிரவு 2 மணியளவில் ராமநாதபுரம் - மதுரை இடையிலான நான்கு வழி சாலையில் பரமக்குடி அருகே உள்ள நென்மேனி என்ற கிராமத்தின் அருகே இந்த கார் சென்று கொண்டிருந்தது.

அப்போது எதிரே வந்த மினி லாரி ஒன்று இந்த காரின் மீது மோதியது. இந்த விபத்தில் கார் உருக்குலைந்து போன நிலையில், காரில் பயணித்த கோவிந்தராஜனின் மனைவி யமுனா (55), மகள் ரூபினி (30) மற்றும் கார் ஓட்டுநர் காளீஸ்வரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த கோவிந்தராஜன், சரண்ராஜ் மற்றும் லாரி ஓட்டுநர் ராஜா, லாரியில் பயணித்த நாகநாதன், ஜெயமாலா ஆகிய 5பேர் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

விபத்தில் உருக்குலைந்த கார்
விபத்தில் சிக்கிய கார்

இதில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே கோவிந்தராஜனும் உயிரிழந்தார். இந்த கோர விபத்து தொடர்பாக பரமக்குடி தாலுகா காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றாலத்திற்கு சுற்றுலா சென்ற குடும்பத்தினர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை: முதல் பிறந்தநாள், கேக் வெட்டிய சில மணி நேரத்தில் சோகம்; கட்டிடம் இடிந்து 14 பேர் உயிரிழப்பு

மும்பையில் கடந்த இரண்டு வாரமாக கனமழை பெய்தது. இதனால் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டது. மும்பை அருகே உள்ள விராரில், விஜய் நகரில் இருக்கும் ரமாபாய் அபார்ட்மெண்ட் என்ற நான்கு மாடி கட்டிடம் நேற்று அதிகாலை த... மேலும் பார்க்க

சேலம்: வீட்டிற்குள் நுழைந்த நாகப்பாம்பு; பிடிக்க முற்பட்ட இளைஞருக்கு நேர்ந்த சோகம்; என்ன நடந்தது?

சேலம் மாவட்டம் நிலவாரப்பட்டி பகுதியைச் சேர்ந்த ராஜமுருகன் (21) என்ற இளைஞர் வெல்டிங் வேலை செய்து வருகிறார். தந்தையை இழந்த இளைஞர் ராஜமுருகன் உடல்நலம் பாதிக்கப்பட்ட தாயுடன் வசித்து வந்தார்.இந்த நிலையில் ... மேலும் பார்க்க

திண்டுக்கல்: திருட்டு பைக், பட்டா கத்தி... விபத்தில் சிக்கி உயிரிழந்த இளைஞர்!

திண்டுக்கல் நாகல் நகர் நத்தம் சாலை மேம்பாலத்தில் மினி பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த வாலிபர் உடல் நசுங்கி உயிரிழந்தார். அவர் வந்த வாகனத்தில் பட்டா கத்தி இருந்ததால... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூரில் பணியாற்றிய ராணுவ வீரர்; உடல் நலக்குறைவால் உயிரிழப்பு... விருதுநகரில் சோகம்!

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வெம்பக்கோட்டை அருகே முத்துசாமிபுரத்தைச் சேர்ந்த விவசாயி ராமசாமி, வீரஓவம்மாள் தம்பதியினர். இவர்களது மகன் சரண் (29) இந்திய ராணுவத்தில் 8 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். இவ... மேலும் பார்க்க

கடலூர்: பள்ளி `ஷூ'வில் தஞ்சமடைந்த பாம்பு… கவனிக்காமல் அணிந்த 12 வயது சிறுவனுக்கு ஏற்பட்ட சோகம்!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொழுதூரைச் சேர்ந்த கண்ணன் – ராதா தம்பதியினருக்கு இரண்டு மகன்கள். கண்ணன் வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் நிலையில், இளைய மகன் கௌசிக்குடன் தொழுதூரில் வசித்து வருகிறார் ராதா. கௌ... மேலும் பார்க்க

கடலூர்: அதிவேகம், பள்ளி பேருந்து தண்டவாளத்தில் கவிழ்ந்து விபத்து; படுகாயங்களுடன் தப்பித்த குழந்தைகள்

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இயங்கி வரும் ஃபாத்திமா மெட்ரிக்குலேஷன் பள்ளியில், அந்தப் பகுதியில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். வழக்கம்போல இன்று காலை அந்த மாணவர்களை வேனில... மேலும் பார்க்க