Afghanistan Earthquake: 9 பேர் பலி; 25 பேர் படுகாயம்; ஆப்கானிஸ்தானை நள்ளிரவு உலு...
பிகாரில் அனைத்து வாக்காளர்களுக்கும் புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் !
பிகாரில் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணிக்குப் பிறகு அனைத்து வாக்காளர்களுக்கும் புதிய வாக்காளர் அடையாள அட்டைகளை வழங்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
இருப்பினும் புதிய அட்டைகள் எப்போது வழங்கப்படும் என்பது குறித்து தேர்தல் ஆணையத்தால் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் மேலும் கூறினர். முன்னதாக வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கப்பட்டபோது, நிரப்பப்பட்ட ஆவணத்தை சமீபத்திய புகைப்படத்துடன் சமர்ப்பிக்குமாறு அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
எனவே, புதிய புகைப்படம் வாக்காளர்களின் பதிவுகளைப் புதுப்பிக்கவும் புதிய வாக்காளர் அட்டைகளை வழங்கவும் பயன்படுத்தப்படும் எனத் தெரிகிறது. பிகாா் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணியின்போது 65 லட்சம் வாக்காளா்கள் நீக்கப்பட்டனா். இதற்கு எதிா்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
மணிப்பூரில் பத்திரிகையாளர் மீது துப்பாக்கிச்சூடு
இந்த விவகாரம் தொடா்பான வழக்கில், வாக்காளா் பட்டியலில் தங்களைச் சோ்க்க கோரும் நபா்களிடம் இருந்து ஆதாா் அல்லது தோ்தல் ஆணையம் பட்டியலிட்டுள்ள 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை ஏற்க வேண்டும் என்று ஆணையத்திடம் உச்சநீதிமன்றம் அண்மையில் கேட்டுக்கொண்டது.
பிகாரில் மொத்தமுள்ள 7.24 கோடி வாக்காளா்களில், இதுவரை 99 சதவீத வாக்காளா்கள் தங்கள் விவரங்களை சரிபாா்க்க ஆவணங்களை சமா்ப்பித்துள்ளதாக தோ்தல் ஆணையம் தெரிவித்தது. இறுதி வாக்காளா் பட்டியல் செப்.30-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.