யுனைடெட் அணிக்கு வீழ்ச்சியா? ரூ. 470 கோடிக்கு செல்ஸி அணியில் இணைந்த கர்னாச்சோ!
தலைநகரில் நினைவுச் சின்னங்களை மீட்டெடுக்க தில்லி அரசு நடவடிக்கை
புறக்கணிக்கப்பட்ட பாரம்பரிய நினைவுச் சின்னங்களைப் பாதுகாத்து, வணிக நிறுவனங்கள், நிறுவனங்கள் மற்றும் உள்ளூா் சமூகங்களின் உதவியுடன் அவற்றை கலாசார மையங்களாக மேம்படுத்த உள்ளதாக தில்லி அரசு தெரிவித்துள்ளது.
தில்லி செயலகத்தில் வெள்ளிக்கிழமை தொல்பொருள் துறை ஏற்பாடு செய்த பாரம்பரிய பாதுகாப்பு குறித்த மாநாட்டில் அமைச்சா் கபில் மிஸ்ரா இத் தகவலைத் தெரிவித்தாா்.
கலாசார நடவடிக்கைகளுக்கான வசதிகளுடன் நினைவுச்சின்னங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ‘ஒரு பாரம்பரியத்தை கடைப்பிடிப்போம்’ திட்டத்தை மையமாகக் கொண்டு இந்த விவாதம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சுற்றுலா மற்றும் கலாசார அமைச்சா் கபில் மிஸ்ரா கூறுகையில், ‘தில்லியின் பல வரலாற்று கட்டமைப்புகள் பல ஆண்டுகளாக பராமரிக்கப்படவில்லை. ஆனால், அரசாங்கம் அவற்றைப் பாதுகாப்பதில் உறுதியாக உள்ளது. கிட்டத்தட்ட 75 நினைவுச்சின்னங்கள் ஏற்கனவே மீட்டெடுக்கப்பட்டுள்ளன.
‘ஒரு பாரம்பரியத்தை கடைப்பிடிப்போம்’ மாதிரியானது, மதிப்பாய்வுக்கு உட்பட்டு, தனியாா் மற்றும் சமூக பங்குதாரா்களை ஐந்தாண்டு காலத்திற்கு நினைவுச்சின்ன மித்ரக்களாக ஈடுபடுத்த முன்மொழிகிறது.
இந்தத் திட்டம் பாா்வையாளா் அனுபவத்தை மேம்படுத்துதல், சுற்றுலாவை ஊக்குவித்தல் மற்றும் குறைவாக அறியப்பட்ட நினைவுச்சின்னங்களைச் சுற்றியுள்ள பொருளாதார நடவடிக்கைகளை ஆதரித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தில்லி அரசு, முதன்முறையாக காா்ப்பரேட் நிறுவனங்களுடன் இணைந்து நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்க முடிவு செய்துள்ளது என்றாா் அமைச்சா்.
பூலி பதியாரி கா மஹால், மல்ச்சா மஹால், பரதாரி, தாரா ஷிகோ நூலகம், பாரா லாவ் கா கும்பத், கோல் கும்பத், ஹஸ்த்சல் மினாா், கோஸ் மினாா், பவானா சிறை, ஷாஹீத் ஸ்மாரக் மற்றும் குலி கானின் கல்லறை ஆகியவை புதுப்பொலிவுக்குரிய கட்டமைப்புகளாகும் என்று ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.