செய்திகள் :

14,000 டி20 ரன்களை கடந்த முதல் இங்கிலாந்து வீரராக அலெக்ஸ் ஹேல்ஸ் சாதனை!

post image

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த அலெக்ஸ் ஹேல்ஸ் டி20 கிரிக்கெட்டில் 14,000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.

இந்த சாதனையை நிகழ்த்திய மூன்றாவது வீரர் என்ற சிறப்பையும் நிகழ்த்தியுள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறும் கரீபியன் பிரீமியர் லீக்கில் இந்த சாதனையை படைத்துள்ளார்.

அலெக்ஸ் ஹேல்ஸ் கரீபியன் பிரீமியர் லீக்கில் டிகேஆர் (டிரின்போகோ நைட் ரைடர்ஸ்) அணிக்கு விளையாடி வருகிறார்.

முதலில் விளையாடிய அமேசான் வாரியர்ஸ் 20 ஓவர்களுக்கு 163 / 9 ரன்கள் எடுக்க, அடுத்து ஆடிய டிகேஆர் 17.2 ஓவர்களில் 169/4 ரன்கள் எடுத்து வென்றது.

இந்தப் போட்டியில் 43 பந்துகளில் அலெக்ஸ் ஹேல்ஸ் 74 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதல் இங்கிலாந்து வீரர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். உலக அளவில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள்

1. கிறிஸ் கெயில் - 14, 562 ரன்கள்

2. கைரன் பொல்லார்டு - 14, 024 ரன்கள்

3. அலெக்ஸ் ஹேல்ஸ் - 14, 012 ரன்கள்

4. டேவிட் வார்னர் - 13, 595 ரன்கள்

5. சோயிப் மாலிக் - 13, 571 ரன்கள்.

England's Alex Hales has set a record by scoring over 14,000 runs in T20 cricket.

“இந்திய அணியின் எதிர்காலம் பாதுகாப்பான கைகளில் இருந்தது...” -புஜாராவைப் பாராட்டிய பிரதமர் மோடி!

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சேதேஷ்வர் புஜாராவைப் பாராட்டி பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஆக. 31) அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.பிரதமர் மோட... மேலும் பார்க்க

டிபிஎல்: நிதீஷ் ராணா அதிரடியில் இறுதிக்கு முன்னேறிய வெஸ்ட் தில்லி!

தில்லி பிரீமியர் லீக்கில் குவாலிஃபயர் 2 போட்டியில் வெஸ்ட் தில்லி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இந்தப் போட்டியிலும் அதிரடியாக விளையாடிய நிதீஷ் ராணா ஆட்ட நாயகன் விருது பெற்றார். தில்லி பிரீமி... மேலும் பார்க்க

18 வயது வீராங்கனையின் அதிவேக சதம்: எலிமினேட்டரில் அசத்தல் வெற்றி!

தி ஹன்ட்ரெட் கிரிக்கெட் தொடரில் தவினா பெர்ரின் அதிவேகமாக சதம் அடித்த முதல் பெண் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். ஆடவர் பிரிவிலும் சேர்த்து ஒரு பந்து அதிகமாக பிடித்து, இரண்டாமிடம் பிடித்து அசத்தியுள்ளார... மேலும் பார்க்க

வைட் பந்தை அடிக்கச் சென்று ஆட்டமிழந்த ஷாய் ஹோப்..! வைரல் விடியோ!

மேற்கிந்தியத் தீவுகள் வீரர் ஷாய் ஹோப் ஆட்டமிழந்த விதம் இணையத்தில் வைரலாகி வருகிறது. கரீபியன் பிரீமியர் லீக்கில் வைட் பந்தை அடிக்கச் செல்லும்போது ஸ்டம்பில் பேட் பட்டு வித்தியாசமாக ஹிட் - விக்கெட் ஆனார்... மேலும் பார்க்க

டிபிஎல்: திக்வேஷ் ரதி, நிதீஷ் ராணா உள்பட 5 வீரர்களுக்கு அபராதம்!

தில்லி பிரீமியர் லீக்கில் திக்வேஷ் ரதி, நிதீஷ் ராணா உள்பட 5 வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் போட்டியின் போது வீரர்கள் மோதலில் ஈடுபடுவதைக் குறைக்க இந்த அபராதம் விதிக்கப்படுகிறது. அட... மேலும் பார்க்க

அதீத வெப்பம்: தாமதமாக நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள்!

வெப்பம் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஆசிய கோப்பையின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. மொத்தம் 19 போட்டிகளில் 18-இல் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக யுஎஇ, இசிபி அறிவித்துள்ளது. ஆடவருக்கான ஆசிய கோப்பை கிர... மேலும் பார்க்க