செய்திகள் :

டிபிஎல்: திக்வேஷ் ரதி, நிதீஷ் ராணா உள்பட 5 வீரர்களுக்கு அபராதம்!

post image

தில்லி பிரீமியர் லீக்கில் திக்வேஷ் ரதி, நிதீஷ் ராணா உள்பட 5 வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் போட்டியின் போது வீரர்கள் மோதலில் ஈடுபடுவதைக் குறைக்க இந்த அபராதம் விதிக்கப்படுகிறது.

அடங்காத திக்வேஷ் ரதிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த நிதீஷ் ராணா

திக்வேஷ் ரதி ஐபிஎல் கிரிக்கெட்டின்போது தனது பந்து வீச்சினாலும் நோட்புக் செலிபிரேஷன் மூலமும் பிரபலமானார்.

அதுமட்டுமின்றி அவர் விளையாடிய போட்டிகளில் எல்லாமே அபராதம் வாங்கியும் கவனம் ஈர்த்தார்.

இந்நிலையில், தில்லி பிரீமியர் லீக்கிலும் அவர் இதேமாதிரி வீரர்களுடன் மோதலில் ஈடுபட நினைத்தார். நிதீஷ் ராணாவுடன் அவர் செய்த வம்பிழுக்கும் செயலால் அவரது ஓவரை அடித்துத் துவைக்கப்பட்டது.

திக்வேஷ் ரதியின் நோட்புக் செலிபிரேஷனை அவருக்கு எதிராகவே நிதீஷ் ராணா செய்து அசத்தினார்.

இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத திக்வேஷ் ரதி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால், அவர்கள் இருவருக்குமே அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

5 வீரர்களுக்கான அபராதம்

கிரீஷ் யாதவ் - 100 சதவிகித அபராதம். (2.3 விதி மீறல், லெவல் 2)

திக்வேஷ் ரதி - 80 சதவிகித அபராதம். (2.2 விதி மீறல்)

நிதீஷ் ராணா - 50 சதவிகித அபராதம். (2.6 விதி மீறல், லெவல் 1)

அமன் பாரதி - 30 சதவிகித அபராதம். (2.3 விதி மீறல், லெவல் 1)

சுமித் மாதூர் - 50 சதவிகித அபராதம். (2.5 விதி மீறல், லெவல் 1)

ஆட்ட நாயகன் விருது வென்ற நிதீஷ் ராணாவுக்கு கிரிக்கெட் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

DPL 2025: Digvesh Rathi was punished by the organisers for breaching the Code of Conduct during an ugly showdown with Nitish Rana. 

அதீத வெப்பம்: தாமதமாக நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள்!

வெப்பம் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஆசிய கோப்பையின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. மொத்தம் 19 போட்டிகளில் 18-இல் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக யுஎஇ, இசிபி அறிவித்துள்ளது. ஆடவருக்கான ஆசிய கோப்பை கிர... மேலும் பார்க்க

வம்பிழுத்த திக்வேஷ் ரதி: சிக்ஸர் அடித்து நோட்புக் செலிபிரேஷன் செய்த நிதீஷ் ராணா!

தில்லி பிரீமியர் லீக்கில் திவ் வேஷ் ரதி ஓவரில் சிக்ஸர் அடித்து நோட்புக் செலிபிரேஷன் செய்த நிதீஷ் ரானா விடியீ வைரலாகி வருகிறது. இந்தக் கொண்டாட்டத்தினால் இருவருக்கும் மோதல் ஏற்பட்டது போட்டியில் பரபரப்பை... மேலும் பார்க்க

அழியாத தடம் பதித்தவர்..! ஆர்ஆர் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகிய ராகுல்!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து ராகுல் திராவிட் விலகியுள்ளார். ஐபிஎல் 2026-க்கு முன்பாக டிராவிட் இந்த முடிவினை எடுத்துள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. க... மேலும் பார்க்க

ஸ்ரீசாந்த் - ஹர்பஜன் விடியோவை வெளியிட்ட லலித் மோடி, கிளார்க்: மனைவி ஆதங்கம்!

ஐபிஎல் தொடரில் ஹர்பஜன் சிங் எதிரணியில் இருந்த ஸ்ரீசாந்தை கன்னத்தில் அறைந்த விடியோவை மைக்கேல் கிளார்க், லலித் மோடி வெளியிட்டார்கள். இந்த விடியோவுக்கு ஸ்ரீசாந்தின் மனைவு புவனேஷ்வரி அருவருக்கத்தக்க செயல்... மேலும் பார்க்க

ஆசிய கோப்பை: ஒரு வாரத்துக்கு முன்பாகவே துபை செல்லும் இந்திய அணி!

இந்திய அணி ஆசிய கோப்பையில் விளையாடுவதற்காக செப்.4ஆம் தேதியே துபைக்குச் செல்லவிருப்பதாக பிசிசிஐ-இன் மூத்த உறுப்பினர் தெரிவித்துள்ளார். துபையில் வருகிற செப்.9ஆம் தேதி ஆடவருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் ப... மேலும் பார்க்க

அசத்தும் சாம் கரண்! சிஎஸ்கே வாழ்த்து!

இங்கிலாந்தில் விளையாடிவரும் சாம் கரண் சிறப்பாக விளையாடுவதால் சிஎஸ்கே அணி வாழ்த்தியுள்ளது. இதற்காக சாம் கரணுக்குச் சிறப்புப் போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த ஆல்-ரவுண்டர் சாம் கரண் (2... மேலும் பார்க்க