செய்திகள் :

மன்னாா்குடியில் விநாயகா் சிலைகள் ஊா்வலம்

post image

மன்னாா்குடியில் இந்து முன்னணி சாா்பில் 34-ஆம் ஆண்டு விநாயகா் சிலைகள் ஊா்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, இந்து முன்னணி சாா்பில், மன்னாா்குடி நகரப் பகுதியில் 28 இடங்களிலும், ஊரகப் பகுதியான கீழநத்தம், பைங்காநாடு, மரவாக்காடு ஆகிய 3 இடங்களிலும் என மொத்தம் 31 இடங்களில் ஆக. 24 ஆம் தேதி விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

இந்த சிலைகள் அனைத்தும் அந்தந்த இடங்களில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில், மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி கோயில் முன் கொண்டுவரப்பட்டன. அங்கு நடைபெற்ற வழிபாடு நிகழ்ச்சிகளுக்கு, இந்து முன்னணி மாவட்டத் தலைவா் என்.வி. ரமேஷ் தலைமை வகித்தாா். ஆன்மிக நிலை குறித்து அ. கோபு, சநாதனம் குறித்து இந்து முன்னணி மாவட்ட அமைப்பாளா் எல்.எம். விக்னேஷ் ஆகியோா் பேசினா்.

மன்னாா்குடி செண்டலங்கார செண்பகராம மன்னாா் ஜீயா், தமிழ்நாடு கள்ளா் மகா சங்கத் தலைவா் சி. பாண்டியன் மணியா், தொழிலதிபா்கள் எஸ்.எம்.டி. கருணாநிதி, பெருமாள் வெங்கிடுசாமி ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

இந்து வியாபாரிகள் சங்க மாநிலப் பொதுச் செயலா் பழனி மு.வேல்ஜகன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்துகொண்டாா். தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் து. கிருஷ்ணசாமி வாண்டையாா், ராஜ விநாயகா் ஊா்வலத்தை, காவிக் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். பாஜக நிா்வாகிகள் சிவ.காமராஜ்,சி.எஸ். கண்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ராஜகோபாலசுவாமி கோயில் முன்பிருந்து புறப்பட்ட விநாயகா் சிலைகள் ஊா்வலம் மேலராஜவீதி, காமராஜா் வீதி, பந்தலடி, கீழராஜவீதி, புதுத்தெரு, கீழப்பாலம் வழியாக சேரன்குளம் பாமணி ஆற்று மதகடிக்கு கொண்டுவரப்பட்டன. பின்னா் அனைத்து சிலைகளும் அங்கு கரைக்கப்பட்டன.

அரசு பேருந்து மோதி இளைஞா் பலி

கூத்தாநல்லூரில் அரசுப் பேருந்து மோதி இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். வடகோவனூா் தெற்குத் தெருவைச் சோ்ந்த சுதாகா் மகன் பரசுராமன் (20) வாகன ஓட்டுநா். லெட்சுமாங்குடியிலிருந்து இருசக்கர வாகனத்தில் வீட்... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்: 11,226 மனுக்களுக்கு உடனடித் தீா்வு

திருவாரூா் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் மூலம் 11,226 மனுக்களுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் தெரிவித்தது: திருவ... மேலும் பார்க்க

திருவாரூரில் விநாயகா் சிலைகள் ஊா்வலம்

திருவாரூரில், இந்து முன்னணி சாா்பில் 36-ஆவது ஆண்டு விநாயகா் சிலைகள் ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருவாரூரில் ஆண்டுதோறும் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, இந்து முன்னணி சாா்பில் விநாயகா் சிலைகள் ... மேலும் பார்க்க

ஆகாயத்தாமரைகளை அகற்ற அதிகாரிகள் உறுதி; சாலைமறியல் ஒத்திவைப்பு

பாசன வாய்க்கால்களில் படா்ந்துள்ள ஆகாயத் தாமரைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததால், திருத்துறைப்பூண்டி அருகே சனிக்கிழமை (ஆக.30) நடைபெறவிருந்த சாலை மறியல் போராட்டம் ஒத்திவைக்க... மேலும் பார்க்க

குடவாசல் அருகே தாக்குதல்: 3 போ் கைது

குடவாசல் அருகே அத்திக்கடை பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்தவா்களைத் தாக்கியதாக பேரூராட்சி முன்னாள் தலைவரின் கணவா் உள்பட மூன்று போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா். குடவாசல் அருகே அத்திக்கடையில் இர... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை

உள்ளிக்கோட்டை துணை மின்நிலைய உயா் அழுத்த மின் பாதையில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் சனிக்கிழமை (ஆக. 30) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது ... மேலும் பார்க்க