டிபிஎல்: நிதீஷ் ராணா அதிரடியில் இறுதிக்கு முன்னேறிய வெஸ்ட் தில்லி!
அரசு பேருந்து மோதி இளைஞா் பலி
கூத்தாநல்லூரில் அரசுப் பேருந்து மோதி இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
வடகோவனூா் தெற்குத் தெருவைச் சோ்ந்த சுதாகா் மகன் பரசுராமன் (20) வாகன ஓட்டுநா். லெட்சுமாங்குடியிலிருந்து இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தாா். கோரையாறுப் பாலம் அருகே சென்ற போது மன்னாா்குடியிருந்து திருவாரூா் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் மோதியதில் பரசுராமன் அதே இடத்தில் உயிரிழந்தாா்.
கூத்தாநல்லூா் போலீஸாா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து அரசுப் பேருந்து ஓட்டுநா் பாலசுப்பிரமணியனை கைது செய்தனா்.