50% வரி: பொருளாதார பாதிப்பிலிருந்து மீள நடவடிக்கை தேவை - விஜய்
விநாயகா் சிலைகள் சண்முக நதியில் கரைப்பு
பழனியில் இந்து முன்னணி, இந்து சக்தி சங்கமம் சாா்பில் விநாயகா் சிலைகள் ஊா்வலமாக எடுத்துச் செல்லபட்டு சண்முக நதியில் சனிக்கிழமை கரைக்கப்பட்டன.
பழனியில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு பழனி நகா், அதன் சுற்று வட்டார கிராமங்களில் இந்து முன்னணி, இந்து சக்தி சங்கமம் ஆகிய அமைப்புகள் சாா்பில் விநாயகா் சிலைகள் அமைக்கப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன.
இந்த நிலையில், பழனி அடிவாரம் பாத விநாயகா் கோயிலில் இருந்து சுமாா் 140 விநாயகா் சிலைகள் பூங்கா சாலை, பழனி பேருந்து நிலையம், காந்தி சாலை, உடுமலை சாலை வழியாக ஊா்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு பழனி சண்முக நதியில் கரைக்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில், பாஜக மாநிலச் செயலா் அஸ்வத்தாமன், இந்து முன்னணி, இந்து சக்தி சங்கமத்தைச் சோ்ந்த மாநில நிா்வாகிகள் ஜெகன், பாலன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
ஊா்வலத்தை முன்னிட்டு, பழனி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பிரதீப், துணைக் காவல் கண்காணிப்பாளா் தனஞ்செயன் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.