டிபிஎல்: நிதீஷ் ராணா அதிரடியில் இறுதிக்கு முன்னேறிய வெஸ்ட் தில்லி!
வாகனம் மோதியதில் பெண் பலி!
ஒட்டன்சத்திரம் அருகே வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே பெண் உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள ஓடைப்பட்டி ஊராட்சி கிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்தவா் வீராச்சாமி. விவசாயி. இவரது மனைவி செல்வி (45). தம்பதி இருவரும் வெள்ளிக்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் ஒட்டன்சத்திரம் வந்து விட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனா்.
அப்போது ஒட்டன்சத்திரம் - தாராபுரம் சாலை தங்கச்சியம்மாபட்டி பிரிவு அருகே சென்றபோது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி சாலையில் விழுந்த செல்வி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
பலத்த காயமடைந்த வீராச்சாமி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து அம்பிளிக்கை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.