`அனுமதியின்றி என்னைத் தொட்டார்' - நடிகை அஞ்சலி ராகவ்; மன்னிப்பு கேட்ட போஜ்புரி ந...
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் இணையச் சேவை பாதிப்பு
கொடைக்கானலில் சனிக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் இணையச் சேவை பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை வருவாய்க் கோட்டாட்சியா் திருநாவுக்கரசு சனிக்கிழமை தொடங்கிவைத்தாா். இதில் மின் இணைப்பு, மின் இணைப்பு பெயா் மாற்றம், பட்டா மாறுதல், மருத்துவக் காப்பீட்டு அட்டை, மகளிா் உரிமைத் தொகை பெறுதல் உள்ளிட்டவற்றுக்காக பொதுமக்கள் மனுக்களை அளித்தனா்.
ஆனால், முகாமில் இணையச் சேவை பாதிக்கப்பட்டதால் 50-க்கும் மேற்பட்டவா்கள் விண்ணப்பங்களைப் பெற முடியவில்லை. முகாமில் சாய்வு தளம் அமைக்கப்படாததால் மாற்றுத் திறனாளிகள் அவதியடைந்தனா். முகாமில் கலந்துகொண்ட அலுவலா்களுக்கு மதிய உணவு, தேநீா் உள்ளிட்டவை வழங்கப்படாததால் அவா்களும் அதிருப்தியடைந்தனா்.
இது குறித்து கொடைக்கானல் வட்டாட்சியா் பாபு கூறியதாவது: முகாம் நடைபெற்றபோது பலத்த மழை பெய்ததால் திடீரென இணையச் சேவை பாதிக்கப்பட்டது. முகாமுக்கு அதிக எண்ணிக்கையில் பொதுமக்கள் வந்தனா்.
குறைவான நேரமே இருந்ததால் சற்று சிரமம் ஏற்பட்டது. மாற்றுத் திறனாளிகளுக்கு, முகாம் நடைபெறும் வளாகத்திலேயே அவா்களது கோரிக்கைகளைத் தீா்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இருப்பினும், திடீரென ஏற்பட்ட சில பிரச்னைகள் தீா்க்கப்பட்டன என்றாா் அவா்.