ஹாட்ரிக் வெற்றியைக் கொடுத்த மோகன்லால்!
மோகன்லால் நடிப்பில் உருவான ஹிருதயப்பூர்வம் திரைப்படம் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
நடிகர் மோகன்லால் நடித்த எம்புரான், துடரும் ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து இயக்குநர் சத்யன் அந்திகாட் இயக்கத்தில் மோகன்லால் நடித்தார்.
‘ஹ்ருதயப்பூர்வம்’ எனப் பெயரிட்டுள்ள இப்படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்திருக்கிறார்.
இப்படம், விழாக்கிழமை திரையரங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனங்களையே பெற்று வருகிறது. முக்கியமாக, படத்தின் கதையும் மோகன்லாலின் நடிப்பும் நன்றாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால், இப்படம் வணிக ரீதியாகவும் வெற்றி பெறவே வாய்ப்புகள் அதிகம்.
இறுதியாக மோகன்லால் நடித்த எம்புரான் மற்றும் துடரும் ஆகிய திரைப்படங்கள் ரூ. 200 கோடிக்கும் அதிகமாக வசூலித்து அசத்தியது.
ஹிருதயப்பூர்வம் படமும் நல்ல வசூலைப் பெற்று மோகன்லாலுக்கு ஹாட்ரிக் வெற்றியைத் தரவுள்ளதால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
இதையும் படிக்க: எப்படியிருக்கிறது இந்த சூப்பர்ஹீரோ கதை? லோகா - திரை விமர்சனம்!