செய்திகள் :

பிளாக்மெயில் வெளியீட்டுத் தேதி!

post image

ஜி.வி. பிரகாஷ் நடித்த பிளாக்மெயில் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கடைசியாக தயாரித்து நடித்த கிங்ஸ்டன் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனைத் தொடர்ந்து, அவர் நடித்துள்ள திரைப்படம் பிளாக்மெயில்.

இரவுக்கு ஆயிரம் கண்கள், கண்ணை நம்பாதே படங்களின் இயக்குநர் மு. மாறன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் தேஜு அஸ்வினி, பிந்து மாதவி, திலக் ரமேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். சாம். சிஎஸ் இசையமைத்துள்ளார்.

திரில்லர் படமாக உருவாகியுள்ள இந்தப் படம் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வெளியாகும் என அறிவித்திருந்தனர். ஆனால், சில காரணங்களால் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், இப்படம் வருகிற செப். 12 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: வா வாத்தியார் வெளியீடு அறிவிப்பு!

actor gv prakash's blackmail movie release date announced

அஜித் - ஆதிக் படத்தின் அறிவிப்பு எப்போது?

நடிகர் அஜித் குமாரின் 64-வது திரைப்பட அறிவிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் அஜித் குமார் கூட்டணியில் உருவான குட் பேட் அக்லி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக ... மேலும் பார்க்க

வா வாத்தியார் வெளியீடு அறிவிப்பு!

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவான வா வாத்தியார் திரைப்படத்தின் வெளியீடு அறிவிக்கப்பட்டுள்ளது.கார்த்தி நடிப்பில் கடைசியாக வெளியான மெய்யழகன் திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வெற்றிப் படமானது.இதன... மேலும் பார்க்க

வெண்கலப் பதக்கம் வென்றது சாத்விக்/சிராஷ் இணை!

பிரான்ஸில் நடைபெற்ற பாட்மின்டன் உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிராக் ஷெட்டி இணை வெண்கலப் பதக்கம் வென்றது.போட்டித்தரவரிசையில் 9-ஆம் இடத்திலிருந்த இந்தக் கூட்டணி அரையிற... மேலும் பார்க்க

உலக தடகள சாம்பியன்ஷிப்: 19 பேருடன் இந்திய அணி

ஜப்பானில் செப்டம்பரில் (13-21) நடைபெறவுள்ள உலக தடகள சாம்பியன்ஷிப்பில் பங்கேற்பதற்கான இந்திய அணியை, 19 பேருடன் இந்திய தடகள சம்மேளனம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.போட்டியின் வரலாற்றில் முதல்முறையாக, ஆடவா்... மேலும் பார்க்க

சின்னா் முன்னேற்றம்; ஸ்வெரெவ் அதிா்ச்சித் தோல்வி!

யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியனான இத்தாலியின் யானிக் சின்னா், காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினாா். முன்னணி வீரரான ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ், 3-ஆவது சுற்றில் அதிா்ச்சித்... மேலும் பார்க்க