செய்திகள் :

மாட்டுக்கறி சாப்பிட தடைவிதித்த வங்கி ரீஜினல் மேலாளர்; `பீப் பெஸ்ட்' போராட்டம் நடத்திய அதிகாரிகள்!

post image

கேரள மாநிலம் கொச்சியில் கனரா வங்கி ரீஜினல் ஆபீஸ் செயல்பட்டு வருகிறது. அங்கு சிறிய அளவிலான கேண்டீன் ஒன்று செயல்படுகிறது. இங்கு பணிபுரியும் அதிகாரிகளுக்காக செயல்படும் அந்த கேண்டீனில் அவ்வப்போது மாட்டுக்கறி சமைக்கப்படுவது வழக்கம். அந்த கேண்டீனில் மாட்டுக்கறி சமைக்கக் கூடாது எனவும், அலுவலகத்தில் வைத்து அதிகாரிகள் மாட்டிறைச்சி சாப்பிடக் கூடாது எனவும் புதிதாக பதவியேற்ற ரீஜினல் மேலாளர் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து ரீஜினல் அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் மாட்டுக்கறி சமைத்து சாப்பிடும் 'பீப் பெஸ்ட்' போராட்டம் நடத்தினர். அலுவலக கேண்டீனில் மாட்டுக்கறி சமைத்து அதிகாரிகள் சேர்ந்து சாப்பிட்டனர். பீப் பெஸ்ட் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. புதிதாக பதவியேற்ற ரீஜினல் மேலாளர் பீகாரைச் சேர்ந்தவர் எனவும், அவர், அதிகாரிகளை மதிக்காமல் செயல்படுவதாகவும் ஏற்கனவே புகார் இருந்துவந்ததது. அதற்கிடையே மாட்டுக்கறிக்கு தடை விதித்ததைத் தொடர்ந்து அதிகாரிகளின் 'பீப் பெஸ்ட்' போராட்டம் நடத்தப்பட்டது.

மாட்டுக்கறிக்கு தடைவிதித்த மேலாளருக்கு எதிராக பீப் பெஸ்ட் போராட்டம்

இதுபற்றி பேங்க் எம்பிளாயீஸ் பெடரேசன் ஆஃப் இந்தியா அமைப்பின் தலைவர் எஸ்.எஸ்.அனில் கூறுகையில், "அரசியலமைப்பின் வழிகாட்டுதல்படிதான் இந்த வங்கி இயங்குகிறது. எந்த உணவை தேர்வு செய்ய வேண்டும் என்பது தனி நபரின் உரிமையாகும். ஒவ்வொருவருக்கும் அவருடைய உணவை தேர்வு செய்யும் உரிமை உள்ளது. இங்குள்ள கேண்டீனில் குறிப்பிட்ட நாட்களில் மாட்டுக்கறி பரிமாறப்பட்டு வந்தது. இனி மாட்டுக்கறி சமைக்கக்கூடாது என கேண்டீன் ஊழியர்களிடம் மேலாளர் கூறியுள்ளார். யாரையும் மாட்டுக்கறி சாப்பிட நாங்கள் நிர்பந்திக்கவில்லை. ஆனால், இது எங்களுடைய போராட்டம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்" என்றார்.

பீப் பெஸ்ட் போராட்டம்

மத்திய அரசின் அஜண்டாவை நிறைவேற்றும் வகையில் மாட்டுக்கறி சாப்பிடக் கூடாது என ரீஜினல் மேலாளர் தெரிவித்துள்ளதாகவும். உணவு உண்ணும் உரிமையை பறிக்க அனுமதிக்கமாட்டோம் எனவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். என்ன உடை அணியவேண்டும், என்ன உணவு உண்ன வேண்டும், எதைப்பற்றி சிந்திக்கவேண்டும் என முடிவு செய்யவேண்டியது உயர் அதிகாரிகள் அல்ல என கே.டி.ஜலீல் எம்.எல்.ஏ தெரிவித்தார். 

TMC: FIR பதிவு செய்த காவல்துறை: `மடையர்களுக்கு இதெல்லாம் புரியாது' - எம்.பி மஹுவா மொய்த்ரா காட்டம்

பங்களாதேஷிலிருந்து சட்டவிரோத ஊடுருவல்களை மேற்கு வங்க அரசு அனுமதிப்பதாகவும், அவர்களை வாக்கு வங்கியாக திரிணாமுல் காங்கிரஸ் பார்ப்பதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் தொ... மேலும் பார்க்க

புதுச்சேரி: "ஒரு பெண்ணுக்கு எவ்வளவு டார்ச்சர்?" - அமைச்சர்களுக்கு எதிராக MLA சந்திர பிரியங்கா வீடியோ

`ஒரு பெண்எம்.எல்.ஏஅவர்களின்கன்ட்ரோலுக்குவரவில்லை என்றால், அவர்களுக்கு எந்த எல்லைக்கும் சென்றுடார்ச்சர்கொடுக்கிறார்கள். எனக்கு ஒரு விஷயம் புரியவில்லை. ஒரு ஆண்எம்.எல்.ஏ-வைஇப்படி எல்லாம்டார்ச்சர்செய்வீர்... மேலும் பார்க்க

மராத்தா இட ஒதுக்கீடு போராட்டம் தீவிரம்: மும்பை சாலைகளை வீடாக்கிய போராட்டக்காரர்கள்; நிலவரம் என்ன?

மராத்தா சமுதாய மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரி மனோஜ் ஜராங்கே பாட்டீல் கடந்த 3 நாட்களாக மும்பையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.மகாராஷ்டிரா முழுவதும் இருந்து 30 ஆயிரம் மரா... மேலும் பார்க்க

சசிகாந்த் செந்தில்: "மருத்துவமனையில் உண்ணாவிரதம் தொடர்கிறது" - காங்கிரஸ் எம்.பி வெளியிட்ட வீடியோ!

தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய எஸ்.எஸ்.ஏ கல்வி நிதியைக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காங்கிரஸ் எம்.பி சசிகாந்த் செந்தில் உடல்நிலை மோசமாகியிருக்கிறது. இரண்டாவது நாள் உண்ணாவிரதப் போராட... மேலும் பார்க்க