திருப்பூா் பின்னலாடை தொழிலை மீட்க நடவடிக்கை தேவை: பிரதமருக்கு இபிஎஸ் கடிதம்
ஜெயிலர் - 2 படத்தில் வித்யா பாலன்!
நடிகை வித்யா பாலன் ஜெயிலர் - 2 திரைப்படத்தில் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கூலி திரைப்படம் வணிக ரீதியாக பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ளதால் அவர் நடித்துவரும் ஜெயிலர் - 2 திரைப்படத்தின் மீதும் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் இப்படத்தின் 60 சதவீத படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன. இதுவும் அதிரடி ஆக்சன் திரைப்படமாக உருவாகி வருகிறது.
இந்த நிலையில், இப்படத்தில் பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருக்கும் வித்யா பாலன் ஜெயிலர் 2 படத்தில் இணைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இறுதியாக, வித்யா பாலன் நடித்த ஃபூல் பாலய்யா - 3 திரைப்படம் வணிக வெற்றியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: விமர்சிக்கப்படும் சாய் அபயங்கர் டூட் பாடல்!