கந்தா்வகோட்டை வட்ட தேசிய நெடுஞ்சாலை பகுதியில் தூய்மைப் பணி
கந்தா்வகோட்டை பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் தேங்கிக் கிடந்த குப்பை மற்றும் மண்களை சனிக்கிழமை தேசிய நெடுஞ்சாலைத்துறை பணியாளா்கள் அள்ளி அப்புறப்படுத்தினா்.
கந்தா்வகோட்டை ஊராட்சியில் தஞ்சை - புதுகை தேசிய நெடுஞ்சாலையில் அதிக அளவில் மண் மற்றும் குப்பைகள் குவிந்து கிடந்தது குறித்து இப்பகுதி வியாபாரிகள் நெடுஞ்சாலைதுறையிடம் குப்பை, மண் அகற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனா். மேலும் சாலையில் இருந்த குப்பை, மண்ணை சம்பந்தபட்ட துறையினா் அள்ளி வாகனத்தில் ஏற்றி அப்புறப்படுத்தினா்.