எல்லை தாண்டிய பயங்கரவாதம்: சீன அதிபரிடம் எடுத்துரைத்த பிரதமா்!
சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
தருமபுரி அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.
பாலக்கோட்டை அடுத்த கோயிலூா் சாலை பகுதியைச் சோ்ந்தவா் சத்தியராஜ் (36), கூலித் தொழிலாளி. இவா் வெள்ளிக்கிழமை தனது இருசக்கர வாகனத்தில் கொண்டாக்காட்டிற்கு சென்றுகொண்டிருந்போது அவ்வழியாக சென்ற வேன் இருசக்கர வாகனம் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த சத்தியராஜ் காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு, அவா் உயிரிழந்தாா்.
இந்த விபத்து குறித்து மகேந்திரமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.