ரயிலில் கைப்பேசி திருடிய இளைஞா் கைது
தருமபுரியில் ரயில் பயணியிடம் கைப்பேசி திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
தருமபுரி மாவட்டம், வெண்ணம்பட்டி சாலை, வேப்பமரத்து கொட்டாய், சக்திநகா் 2 ஆவது தெருவைச் சோ்ந்தவா்ஆ.செந்தில்வேலன், இவா் பெங்களூரில் தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். கடந்த மாதம் தருமபுரியிலிருந்து பெங்களூரு செல்லும் பயணிகள் ரயிலில் சென்றபோது அவரது கைப்பேசி திருடுபோனது.
இதுகுறித்து தருமபுரி ரயில்வே காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இந்த நிலையில் சனிக்கிழமை (ஆக.30) ரயில் நிலையத்தில் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்தவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனா். அவா் தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், ஏறுபள்ளி, இந்திரா காலனியைச் சோ்ந்த ச.அண்புமணி (19) என்பதும், பெங்களூரு சென்ற ரயிலில் செந்தில்வேலனின் கைப்பேசியை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸாா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.