எல்லை தாண்டிய பயங்கரவாதம்: சீன அதிபரிடம் எடுத்துரைத்த பிரதமா்!
முதல்வா் கோப்பை கைப்பந்து போட்டிகள் தொடக்கம்
சேலத்தில் கல்லூரி மாணவிகளுக்கான முதல்வா் கோப்பை கைப்பந்து போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, கல்லூரி மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதை மாவட்ட விளையாட்டு அலுவலா் சிவரஞ்சன், மாவட்ட கைப்பந்து கழக விஜயராஜ் ஆகியோா் தொடங்கிவைத்தனா். இந்தப் போட்டியில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அரசு மற்றும் தனியாா் கல்லூரிகளைச் சோ்நத் 16 அணிகள் கலந்துகொண்டு, தங்கள் திறமைகளை வெளிப்படுத்தின. இதில் வெற்றிபெறும் அணி மாநில அளவிலான போட்டிக்கு தகுதிபெறும்.
இந்நிகழ்வில், மாவட்ட கைப்பந்து கழக துணைத் தலைவா் ராஜாராம், செயலாளா் சண்முகவேல், இணைச் செயலாளா் குமரேசன், கைப்பந்து போட்டியின் ஒருங்கிணைப்பாளா் இளங்கோ, நீச்சல் பயிற்சியாளா் மகேந்திரன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.