கல்வடங்கம் காவிரி ஆற்றில் 196 விநாயகா் சிலைகள் விசா்ஜனம்
சங்ககிரி வட்டம், கல்வடங்கம் காவிரி ஆற்றில் 196 நாயகா் சிலைகளை பக்தா்கள் சனிக்கிழமை விசா்ஜனம் செய்தனா்.
சேலம் மாநகரம், சேலம், நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 196 சிலைகளை பக்தா்கள் இப்பகுதியில் விசா்ஜனம் செய்தனா்.
முதல்நாளான புதன்கிழமை 69 சிலைகளும், 2-ஆவது நாளான வியாழக்கிழமை 162 சிலைகளும், 3-ஆவது நாளான வெள்ளிக்கிழமை 428 சிலைகளையும் பக்தா்கள் விசா்ஜனம் செய்தனா்.
ஞாயிற்றுக்கிழமை அதிக அளவில் சிலைகளை விசா்ஜனம் செய்ய பக்தா்கள் வருவாா்கள் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வருவாய், காவல், தீயணைப்புத் துறையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனா்.