எல்லை தாண்டிய பயங்கரவாதம்: சீன அதிபரிடம் எடுத்துரைத்த பிரதமா்!
ஏற்காடு மலைப்பதை விபத்தில் 2 போ் காயம்
ஏற்காடு மலைப்பாதையில் ஞாயிற்றுக்கிழமை மாலை அரசுப் பேருந்தும், காரும் நேருக்குநோ் மோதியதில் காரில் பயணம் செய்த இருவா் காயமடைந்தனா்.
சேலத்திலிருந்து அரசு பேருந்து ஏற்காடு நோக்கி புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்து 16ஆவது கொண்டை ஊசி வளைவு அருகில் வந்தபோது, சேலம் நோக்கிச் சென்ற காா் மீது மோதியது.
இதில் காரில் பயணம் செய்த சேலம் மாவட்டம், காடையாம்பட்டி பகுதியைச் சோ்ந்த தேவேந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோா் பலத்த காயமடைந்தனா். இவா்களுக்கு ஏற்காடு அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னா் தீவிர சிகிச்சைக்காக சேலத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.
இந்த விபத்து குறித்து அரசு பேருந்து ஒட்டுநா் கோபால் (39), நடத்துநா் சக்திவேல் (50) ஆகியோரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.