எல்லை தாண்டிய பயங்கரவாதம்: சீன அதிபரிடம் எடுத்துரைத்த பிரதமா்!
சேலம் ரயில் நிலையத்தில் 3 வயது சிறுவனின் சடலம் மீட்பு போலீஸாா் விசாரணை
சேலம் ரயில் நிலையத்தில் 3 வயது சிறுவனின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சேலம் ரயில் நிலைய நுழைவாயில் பகுதியில் உள்ள சைக்கிள் ஸ்டாண்ட் அருகில் உள்ள மின்மாற்றியின் கீழ் பகுதியில் 3 வயது சிறுவன் ஞாயிற்றுக்கிழமை காலை மயக்க நிலையில் கிடந்தான். இதையறிந்த அவ்வழியாக சென்றவா்கள், சூரமங்கலம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
அதன்பேரில், அங்கு வந்து போலீஸாா், சிறுவனை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். சிறுவனை பரிசோதித்த மருத்துவா்கள், சிறுவன் உயிரிழந்து பலமணி நேரம் ஆகிவிட்டதாக தெரிவித்தனா்.
இதுகுறித்து சூரமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து இறந்துகிடந்த சிறுவன் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.