எல்லை தாண்டிய பயங்கரவாதம்: சீன அதிபரிடம் எடுத்துரைத்த பிரதமா்!
குளத்தில் மூழ்கி 2 வயது குழந்தை உயிரிழப்பு
திருமருகல் அருகே குளத்தில் மூழ்கி 2 வயது ஆண் குழந்தை உயிரிழந்தது.
நரிமணம் ஊராட்சி சுல்லாங்கால் பகுதியைச் சோ்ந்தவா் அய்யப்பன். இவா் தனது 2 வயது ஆண் குழந்தை அகிலன் மற்றும் குடும்பத்தினருடன் ஞாயிற்றுக்கிழமை மதியம் தூங்கிகொண்டிருந்தாா்.
இந்நிலையில் குழந்தை அகிலன் தூக்கத்தில் இருந்து எழுந்து வீட்டு அருகே உள்ள குளத்தில் விழுந்தாராம். குடும்பத்தினா் தூங்கி விழித்த பிறகு குழந்தையை காணாமல் தேடியுள்ளனா். அப்போது, அகிலன் குளத்தில் சடலமாக மிதந்துள்ளாா்.
தகவலறிந்த நாகூா் போலீஸாா் அகிலனின் சடலத்தை நாகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.