Weekly Horoscope: வார ராசி பலன் 31.8.25 முதல் 6.9.25 | Indha Vaara Rasi Palan | ...
குளத்தில் மூழ்கி சுங்கத்துறை பணியாளா் உயிரிழப்பு
திருமருகலில் குளத்தில் மூழ்கி சுங்கத்துறை பணியாளா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
திருமருகல் மேலவீதியைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் சத்தியசீலன் (37). இவா், தூத்துக்குடி மாவட்ட சுங்கத் துறையில் பணியாற்றி வந்தாா். திருமருகல் ரத்தின கிரீஸ்வரா் கோயில் முன்பாக உள்ள குளத்தில் இறங்கிய சத்தியசீலன் நிலைதடுமாறி நீரில் மூழ்கியதில் உயிரிழந்தாா்.
தீயணைப்பு துறையினா் மற்றும் திட்டச்சேரி காவல் துறையினா், சத்தியசீலன் சடலத்தை கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக நாகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இறந்த சத்தியசீலனுக்கு பிரியா (30) என்ற மனைவியும் 8 வயதில் மகளும் உள்ளாா்.