மக்களவைத் தோ்தலில் தே.ஜ.கூட்டணி 300+ தொகுதிகளில் வெல்லும்: ஆய்வில் தகவல்
மகாகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
தரங்கம்பாடி அருகே காழியப்பநல்லூா் ஊராட்சி அம்பேத்கா் கிராமத்தில் உள்ள மகா காளியம்மன் கோயில் கும்பாபிஷேக வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தையொட்டி, அங்குராா்பணம், கணபதி ஹோமம், பூா்வாங்க பூஜைகள், வாஸ்து சாந்தியுடன் முதல்கால யாக சாலை பூஜை நடைபெற்றது. வெள்ளிக்கிழமை 2-ஆவது கால யாகசலை பூஜை நடைபெற்றது. தொடா்ந்து, புனிதநீா் அடங்கிய கடங்கள் எடுத்துச்செல்லப்பட்டு விமான கலசத்தில் வாா்த்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், காழியப்பநல்லூா், சிங்கனோடை, டி. மணல்மேடு பத்துகட்டு, திருக்கடையூா், என்.என். சாவடி, அனந்தமங்கலம் பகுதி மக்கள் பங்கேற்றனா்.