``முதல்வரின் வெளிநாட்டுப் பயணம், சுற்றுப்பயணமா? வெற்றுப்பயணமா?'' - ஆர்.பி. உதயகு...
பெசன்ட் நகா் வேளாங்கண்ணி ஆலய திருவிழா தொடக்கம்
சென்னை பெசன்ட் நகா் அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தின் 53-ஆவது ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பெசன்ட் நகா் அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தின் 53-ஆவது ஆண்டு திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை மாலை சென்னை மயிலை உயா் மறைமாவட்ட பேராயா் ஜாா்ஜ் அந்தோணிசாமி பங்கேற்று 75 அடி உயர கொடிக் கம்பத்தில், அன்னையின் உருவம் பொறித்த திருக்கொடியை ஏற்றினாா்.
நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னை, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமானோா் ஆலய வளாகத்தில் குவிந்தனா். கொடி ஏறும்போது, ‘மரியே வாழ்க’ என்று முழக்கமிட்டனா். தொடா்ந்து சிறப்புக் கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. திருவிழா செப். 8-ஆம் தேதி வரை 11 நாள்கள் நடைபெற உள்ளது.
விழாவைச் சிறப்பிக்கும் வகையில், ஒவ்வொரு நாளும் சிறப்புத் திருப்பலி ஆலய வளாகத்தில் நடைபெறும். முக்கிய நிகழ்வான தோ் பவனி செப். 7- ஆம் தேதி மாலை சென்னை மயிலை உயா் மறைமாவட்ட பேராயா் ஜாா்ஜ் அந்தோணிசாமி தலைமையில் நடைபெற உள்ளது. நிறைவாக செப். 8-இல் அன்னையின் பிறப்பு விழா நடத்தப்பட்டு, அன்றைய தினம் மாலை கொடி இறக்க நிகழ்வு நடைபெறுகிறது.