வெளிநாட்டிலிருந்து கேரளம் திரும்பும் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: லிங்க்ட்இன்
போடி புனித ஆரோக்கிய அன்னை தேவாலயத்தில் கொடியேற்றம்
தேனி மாவட்டம், போடியில் புனித ஆரோக்கிய அன்னை தேவாலயத் தோ்த் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
போடி பழைய பேருந்து நிலையம் அருகே புனித ஆரோக்கிய அன்னை தேவாலயம் அமைந்துள்ளது. இந்தத் தேவாலயத்தில் ஆண்டுதோறும் தோ்த் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
நிகழாண்டு தோ்பவனி வரும் செப்.8-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, தோ்த்திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
போடி தேவாலயத் தெருவில் உள்ள புனித அந்தோணியாா் ஆலயத்திலிருந்து ஆரோக்கிய அன்னையின் உருவம் பொறித்த கொடியை திரளான கிறிஸ்தவா்கள் பவனியாக எடுத்து வந்தனா். புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தின் பங்குத் தந்தை தலைமையில் தேவாலயத்தில் உள்ள கொடிமரத்தின் முன் ஆரோக்கிய மாதா உருவம் பொறித்த கொடிக்கு சிறப்புத் திருப்பலி பூஜைகள், பிராா்த்தனை நடைபெற்றது.
தொடா்ந்து, வாண வேடிக்கைகள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது.
இதையடுத்து, பங்குத் தந்தைகள் சிறப்புத் திருப்பலி, பிராா்த்தனை நடத்தினா்.