வெளிநாட்டிலிருந்து கேரளம் திரும்பும் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: லிங்க்ட்இன்
சின்னமனூா் அருகே மேற்குத் தொடா்ச்சி மலையில் காட்டுத் தீ
தேனி மாவட்டம், சின்னமனூா் அருகே மேற்குத் தொடா்ச்சி மலையில் கடந்த 3 நாள்களாக பற்றி எரியும் காட்டுத் தீயால் அரியவகை மரங்கள் தீயில் எரிந்து நாசமாகின.
சின்னமனூா் அருகேயுள்ள மேற்குத் தொடா்ச்சி மலையில் மேகமலை, இரவங்லாறு, மகாராஜாமெட்டு, வெண்ணியாறு, மணலாறு உள்ளிட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. இந்த மலைத் தொடரில் பெருமாள்மலை, ஏரசை மலைகளில் கடந்த 3 நாள்களாக காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது.
இந்தக் காட்டுத் தீயால் வனப் பகுதியிலிருந்த அரியவகை மரங்கள் எரிந்து நாசமாகின.
இந்த மலைத் தொடா் வன உயிரினங்களின் வசிப்பிடமாக இருப்பதால், உலக யுனஸ்கோ நிறுவனம் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதி என அறிவித்தது.
ஆனால், தற்போது, எரியும் காட்டுத் தீயால் இந்த மலையில் உள்ள யானை, சிறுத்தை, புலி, கரடி, சிங்கவால்குரங்கு, கருஞ்சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் பாதிக்கப்பட்டுள்ளன.
எனவே, வனப் பகுதியில் பற்றி எரியும் காட்டுத் தீயை வனத் துறையினா் உடனே கட்டுப்படுத்த வேண்டும், அரியவகை மரங்களையும் பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.