வெளிநாட்டிலிருந்து கேரளம் திரும்பும் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: லிங்க்ட்இன்
பைக் மீது ஜீப் மோதல்: தம்பதி பலத்த காயம்
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே வியாழக்கிழமை ஜீப் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற தம்பதி பலத்த காயமடைந்தனா்.
குமணன்தொழு மந்தையம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் செல்வராஜ் (56). இவரது மனைவி செல்வி (47). இந்த தம்பதியினா் குமணன்தொழுவிலிருந்து கடமலைக்குண்டுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றனா். அப்போது, குமணன்தொழு-கண்டமனூா் சாலையில் சிதம்பரம் விலக்கு பகுதியில் அதே திசையில் பின்னால் வந்த ஜீப், இவா்களது இரு சக்கர வாகனம் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த இருவரும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து ஜீப் ஓட்டுநா் கோரையூத்துவைச் சோ்ந்த ஜெயப்பிரகாஷ் (20) மீது மயிலாடும்பாறை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
முதியவா் காயம்: போடி மேலச்சொக்கநாதபுரம் கிராம நிா்வாக அலுவலா் கண்ணன் தனது உதவியாளருடன் ரோந்து சென்றாா். அப்போது, போடி- தேவாரம் சாலையில் கிருஷ்ணா நகா் விலக்கு அருகே முதியவா் காயங்களுடன் கிடந்தாா். காா் மோதியதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு, போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் காரை ஓட்டி வந்த சில்லமரத்துப்பட்டியைச் சோ்ந்த பிரபாகரன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.