செய்திகள் :

ஜம்மு - காஷ்மீரைப் புரட்டிப்போடும் பேரிடர்! 10 பேர் பலி?

post image

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் மேக வெடிப்பு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இன்று 10 பேர் பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜம்மு - காஷ்மீர், ரீஸி மாவட்டம் மஹோர் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில், ஒரு வீடு அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அதிலிருந்து ஏழு பேர் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

மஹோர் பகுதியில் பட்டார் கிராமத்தில் கனமழை பெய்ததால் கடும் நிலச்சரிவு ஏறப்ட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த வீட்டில், நசிர் அகமது, அவரது மனைவி மற்றும் ஐந்து மகன்களுடன் இருந்ததாகவும், அவர்கள் அனைவரும் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

ராம்பன் மாவட்டத்தில் ராஜ்கட் பகுதியில், சனிக்கிழமை அதிகாலையில் மேக வெடிப்பு காரணமாக பயங்கர மழை பெய்து, வெள்ளம் ஏற்பட்டதாகவும், இதில் 3 பேர் அடித்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

சம்பவ இடங்களில் மீட்புப் படையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஆபரேஷன் சிந்தூர் திட்டமிடப்பட்டது எவ்வாறு? புதிய விடியோக்கள் வெளியீடு

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில், பயங்கரவாத முகாம்கள் மீது, இந்திய முப்படைகள் இணைந்து நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான புதிய விடியோக்கள் வெளியாகியிருக்கின்றன.புது தில்லியில் இன்று நடைபெற்ற என்டிடிவி தற... மேலும் பார்க்க

இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் விருப்பம்!

இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.இந்தியா - பாகிஸ்தான் இடையே நீண்டகாலமாகவே பிரச்னை இருந்து வருகிறது. பிரச்னைகள் முடிவிலாமல் நீண்டுகொண்டே இருக்கும்நிலையில், ... மேலும் பார்க்க

கேரளம்: மாட்டிறைச்சிக்குத் தடை! வங்கி ஊழியர்கள் நூதன போராட்டம்!

கொச்சியில் உள்ள ஒரு வங்கியின் உணவு விடுதியில் மாட்டிறைச்சி சமைக்கவோ சாப்பிடவோ கூடாது என வங்கி மேலாளர் உத்தரவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.கேரள மாநிலம், கொச்சியில் உள்ள கனரா வங்கியின் வட்டார மேலாளராக ப... மேலும் பார்க்க

ஜப்பான் பயணம் நிறைவு! சீனா புறப்பட்டார் பிரதமர் மோடி!!

அரசுமுறைப் பயணமாக ஜப்பான் சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்க, சீனா புறப்பட்டுச் சென்றார்.ஜப்பானிலிருந்து புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி, தன்னுடைய எக்... மேலும் பார்க்க

ஒட்டுமொத்த கிராமத்தை ஒரு வீடாக மாற்றிய தேர்தல் ஆணைய மேஜிக்: ராகுல்

பிகார் வாக்காளர் பட்டியல் தயாரிப்பில் நடந்திருப்பதாகக் கூறப்படும் ஏகப்பட்ட குளறுபடிகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வரும் காங்கிரஸ் எம்.பி. ராகுல், ஒட்டுமொத்த கிராமத்தையும் ஒரு கற்பனை வீடாக மாற்றியிருக்கி... மேலும் பார்க்க

பாதுகாப்புத் துறையில் வெளிநாட்டுப் பொருள்களை இந்தியா நம்பியிருக்க முடியாது: ராஜ்நாத் சிங்

இந்தியாவின் பாதுகாப்பு உள்கட்டமைப்பு எந்த நிச்சயமற்ற வெளிநாட்டுத் தலையீட்டையும் சார்ந்து இருக்கக்கூடாது என்றும் அதன் சொந்த திறன்களின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்ந... மேலும் பார்க்க