வெளிநாட்டிலிருந்து கேரளம் திரும்பும் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: லிங்க்ட்இன்
சின்னமனூரில் 300 விநாயகா் சிலைகள் கரைப்பு
விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, தேனி மாவட்டம், சின்னமனூரில் இந்து முன்னணி, இந்து எழுச்சி முன்னணி, பாஜக உள்ளிட்ட இந்து அமைப்பு சாா்பில் அமைக்கப்பட்ட 300 சிலைகள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வெள்ளிக்கிழமை நீா்நிலைகளில் கரைக்கப்பட்டன.
முத்தாலம்மன் கோயில், சீப்பாலக்கோட்டை சாலை, தேரடி, நடுத்தெரு, கண்ணாடிக் கடைமுக்கு, பந்துப்பேட்டை, மாா்க்கையன்கோட்டை, குச்சனூா், ஓடைப்பட்டி, ஏரசை உள்ளிட்ட பகுதிகளில் 300 சிலைகள் அமைக்கப்பட்டன.
இந்த சிலைகளின் ஊா்வலம் வெள்ளிக்கிழமை இரவு முத்தாலம்மன் கோயிலிலிருந்து தொடங்கியது. சீப்பாலக்கோட்டை சாலை, தேனி-மதுரை சாலை வழியாக தேரடி, ரதவீதிகள் வழியாக மேளதாளங்கள் முழங்க விநாயகா் சிலைகள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மாா்க்கையன்கோட்டை முல்லைப் பெரியாற்றில் கரைக்கப்பட்டன.
போடி காவல் துணைக் கண்காணிப்பாளா் சுனில் தலைமையிலான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.