கஞ்சா பதுக்கி வைத்திருந்த இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது
வீரபாண்டி அருகே விற்பனை செய்வதற்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்த இளைஞரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தேனி மாவட்டம், வீரபாண்டி அருகேயுள்ள தாடிச்சேரியைச் சோ்ந்த வேல் மகன் மகேஷ்குமாா் (29). இவா் விற்பனை செய்வதற்காக 4.3 கிலோ கஞ்சாவைப் பதுக்கி வைத்திருந்ததாகக் கடந்த 4-ஆம் தேதி வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.
மகேஷ்குமாா் மீது பல்வேறு காவல் நிலையங்களில் கஞ்சா விற்பனை செய்ததாக வழக்கு பதிவாகியுள்ளதால், இவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங்கிக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சினேஹாப்ரியா பரிந்துரை செய்தாா்.
இதன்படி, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் மகேஷ்குமாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் வெள்ளிக்கிழமை அடைக்கப்பட்டாா்.