செய்திகள் :

விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்

post image

கமுதி அருகே சாலை விபத்தில் முளைச்சாவு அடைந்த இளம் பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட நிலையில், அவரது பூத உடலுக்கு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி தாலுகா கொல்லங்குளம் கிராமத்தை சேர்ந்த செல்வக்குமார், இவரது மனைவி சந்தியா(27). இவர் கடந்த 27 ஆம் தேதி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கி தலையில் படுகாயம் ஏற்பட்டது.

அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு பேரையூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தலையில் மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையில் பலத்த காயம் ஏற்பட்டதில் அதிகளவில் ரத்தம் படிந்துதுள்ளதை மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்தனர்.

இதனைத் தொடர்ந்து, மூளையின் முழு செயல்பாட்டை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் மூளைச்சாவு அடைந்ததை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

இதையடுத்து உறவினர்களிடம் இது குறித்து தெரிவிக்கப்பட்டது. மேலும், அரசு வழிகாட்டுதல் படி உடல் உறுப்பு தானம் செய்வதால் பல உயிர்கள் காப்பாற்றப்படும் என உறவினர்களிடம் மருத்துவ அதிகாரிகள் எடுத்துக் கூறினார்.

இதனைத் தொடரந்து உடல் உறுப்புகளை தானம் செய்ய உறவினர்கள் முன்வந்தனர்.

இதனையடுத்து, சனிக்கிழமை காலை சந்தியாவின் இதயம், இரண்டு நுரையீரல்கள், சிறுநீரகங்கள், இரண்டு கண்கள் அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டு சென்னைக்கு உரிய பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன. மருத்துவ பிரிவில் உடல் உறுப்புக்காக காத்திருக்கும் 6 பேருக்கு உடல் உறுப்புகள் பொருத்தப்பட உள்ளது.

தொடர்ந்து, சந்தியாவின் உடலுக்கு மருத்துவமனை வளாகத்தில் அரசு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், மருத்துவத் கல்லூரி முதல்வர் அமுதாராணி மலர் வளையம் மற்றும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில், மயக்கவியல் பிரிவு இணை பேராசிரியர் சுகுமார் மற்றும் பரதிதரன், நரம்பியல் அறுவை சிசிச்சை நிபுணர் அறிவழகன், சிறுநீரகவியல் அறுவை சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை பிரிவு பேராசிரியர் சரவணன் மற்றும் சரவணன், மருத்துவ கண்காணிப்பாளர் ஜவஹர், இணை மருத்துவ கண்காணிப்பாளர் ஞானகுமார், நிலைய மருத்துவ அலுவலர் மனோஜ்குமார் மற்றும் அனைத்துத் துறை மருத்துவர்கள் செவிலியர்கள் மருத்துவமனை பணியாளர்கள் என அனைவரும் கலந்துகொண்டு அவரது உடலுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

மத்திய பாஜக அரசைக் கண்டித்து திருவள்ளூா் எம்.பி. 2-வது நாளாக உண்ணாவிரதம்!

Organs of young woman who died of brain damage in accident donated

நெல் கொள்முதல் விலையை உயர்த்தி முதல்வர் உத்தரவு: அமைச்சர்கள் நன்றி

விவசாயிகளின் வாழ்வாரத்தை உயர்த்தும் வகையில் தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி நெல் கொள்முதல் விலையை தற்போது உயர்த்தி உத்தரவிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினை வேளாண்மை மற்றும் உழவர் நலத்த... மேலும் பார்க்க

மத்திய பாஜக அரசைக் கண்டித்து திருவள்ளூா் எம்.பி. 2-வது நாளாக உண்ணாவிரதம்!

திருவள்ளூா்: தமிழக மாணவா்களுக்கு கல்வித் தொகையை வழங்காததை கண்டித்தும், நிதி அளிக்க மறுக்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து திருவள்ளூா் மக்களவை உறுப்பினா் சசிகாந்த் செந்தில் இரண்டாவது நாளாக உண்ணாவிரதப் ... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 14,000 கன அடியாக அதிகரிப்பு

பென்னாகரம்: கர்நாடக அணைகளில் நீர் திறப்பு மற்றும் தமிழக காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 14,000 கன அடியாக அதிகரித்துள்ளது.கடந்த சில நாள்களா... மேலும் பார்க்க

பழனிசாமி பயணம் போன்று எனது பயணம் இருக்காது: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமியின் வெளிநாட்டுப் பயணம் போன்று எனது பயணம் இருக்காது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சா்வதேச முதலீடுகளை ஈா்க்கும் வகையில், ஜொ்மனி, பிரிட்டன் ... மேலும் பார்க்க

ஓய்வுபெறும் நாளில் ஊழியர்கள் இடைநீக்கம் இல்லை: தமிழ்நாடு அரசு

சென்னை: ஓய்வுபெறும் நாளில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான இடைநீக்கம்(சஸ்பெண்ட்) செய்யப்படுவதை தவிர்க்க, விதிகளை திருத்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. முதல்வர் சட்டப்பேரவையில் அறிவித்ததன் ... மேலும் பார்க்க

புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை: பவுன் ரூ.77,000-ஐ நெருங்கியது!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.76.960-க்கு விற்பனையாகி வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது.சென்னையில் இந்த மாதத்தின் தொடக்கம் முதலே தங்... மேலும் பார்க்க