சீனாவில் பிரதமர் மோடி
ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி 2 நாள் பயணமாக சீனா சென்றடைந்தார்.
தியான்ஜின் வந்திறங்கிய அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 2018-ஆம் ஆண்டுக்குப் பிறகு, பிரதமா் மோடி சீனாவுக்குச் செல்வது இதுவே முதல் முறையாகும்.
தொடர்ந்து, பிரதமா் மோடி நாளையும், நாளை மறுநாள் சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சிமாநாட்டில் பங்கேற்க உள்ளாா்.
முதலீடு ஈர்க்கவா? குடும்ப முதலீடு செய்யவா? - முதல்வருக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
இந்த மாநாட்டுக்கிடையே, சீன அதிபா் ஷி ஜின்பிங் உள்பட பல உறுப்பு நாடுகளின் தலைவா்களுடன் பிரதமா் மோடி இருதரப்பு சந்திப்புகளை மேற்கொள்வாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.