Weekly Horoscope: வார ராசி பலன் 31.8.25 முதல் 6.9.25 | Indha Vaara Rasi Palan | ...
ராகுல் காந்தியின் பேரணியில் இணைகிறது திரிணமூல் காங்கிரஸ்!
பாட்னாவில் நடைபெறும் ராகுல் காந்தியின் வாக்குரிமைப் பேரணியில் செப்டம்பர் 1ஆம் தேதி திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் பங்கேற்கிறது.
அக்கட்சியின் சார்பில் மக்களவை எம்.பி. யூசுப் பதானும், உ.பி.தலைவர் லிலிதேஷ் திரிபாதியும் பங்கேற்பார்கள் என்று கட்சி வட்டாரங்கள் சனிக்கிழமை தெரிவித்தன. ஏற்கெனவே, இந்த பேரணியில் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த முதல்வர் ஸ்டாலின், அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ள நிலையில் தற்போது திரிணமூல் காங்கிரஸும் இணைகிறது.
திருவள்ளூர் எம்.பி. சசிகாந்த் செந்தில் மருத்துவமனையில் அனுமதி
பிகாரில் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஆகஸ்ட் 17 அன்று ரோஹ்தாஸ் மாவட்டத்தில் உள்ள சசாரமில் இருந்து காங்கிரஸின் வாக்காளர் அதிகார பேரணியை ராகுல்காந்தி தொடங்கினார். இந்த பேரணி செப்டம்பர் 1 ஆம் தேதி பாட்னாவில் முடிவடைகிறது.
யாத்திரை இதுவரை கயாஜி, நவாடா, ஷேக்புரா, லக்கிசராய், முங்கர், கதிஹார், தர்பங்கா, மதுபானி, சீதாமர்ஹி, முசாபர்பூர், பூர்னியா, மேற்கு சம்பாரண், கோபால்கஞ்ச், கிழக்கு சம்பாரண் மற்றும் சிவான் மாவட்டங்களைச் சென்றுள்ளது. மேலும் போஜ்பூர் மற்றும் பாட்னா வழியாகச் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.