சென்னை: நள்ளிரவு கனமழையால் விமான சேவை பாதிப்பு!
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் சனிக்கிழமை நள்ளிரவு 11 மணிமுதல் பலத்த மழை பெய்ததால், விமான சேவை பாதிக்கப்பட்டது.
சென்னையில் சனிக்கிழமை நள்ளிரவு பெய்த கனமழையால், இங்கிருந்து புறப்பட வேண்டிய 15 விமானங்களும் தாமதமாகப் புறப்பட்டதுடன், 4 விமானங்கள் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டதால் பயணிகள் அவதி.

மேலும், 8 விமானங்கள் நீண்ட நேரம் வானிலேயே வட்டமடிக்கப்பட்டு, தாமதமாக தரையிறங்கின.
சென்னை ராயபுரம், பாரிமுனை, வடபழனி, நுங்கம்பாக்கம், கோயம்பேடு, அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழையும், மாதவரம், மணலி, அம்பத்தூர், திருவெற்றியூர், ஆவடி உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த காற்றுடன் மழையும் வெளுத்து வாங்கியது.
இதையும் படிக்க:நாளை பாமக ஒழுங்கு நடவடிக்கை குழுக் கூட்டம்: அன்புமணி மீது நடவடிக்கைக்கு வாய்ப்பு!